பக்கம்:சைவமும் தமிழும்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3蝠4 - சைவ சமய விளக்கு பெறுக இவ்வையகம்" என்ற திருமூலரின் திருவாக்கினை யும் காண்க. இதன் பயனாகவே திருமந்திரம், சிவஞான போதம், சிவஞான சித்தியார் போன்ற தத்துவ நூல்கள் உலகிற்குக் கிடைத்தன என்பதை எண்ணி மகிழ்க. இவ் வியல்புடையவரே உலகிறகு நல்வழி காட்டுதற்கு உரியர் என்பதை விளக்கும்பொருட்டுத்தான் கீத்தார் பெருமை’ என்ற ஓர் அதிகாரத்தைத் தமது நூலில் பாயிரப் பகுதியில் வைத்துள்ளார் வள்ளுவப் பெருந்தகை என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆகவே, சீவன் முத்தர்க்கு அவரது அறிவு இச்சைச் செயல்கள் ஒவ்வொரு பொழுது புறத்தே செல்லு மாயின் ஆப்பொழுதும் இந்நிலையில் அவை நிகழ்தலன்றி வேறு வகையில் நிகழமாட்டா என்பதைக் கருத்தினில் இருத்துக. பிராரத்தம் காரணமாக உடலுக்கு இன்பம் வரிலும் துன்பம் வரினும் இன்பத்தில் மகிழ்தலும் இல்லை துன்புத் தில் வருந்துதலும் இல்லை. இந்த இருதிறத்திலும் ஒரு தன்மையாய் இறைவன் திருவடி நிழலில் அகலசது நிற்பர் என்பதை அறிந்து தெளிக, பரஞானத்தால் புரனைத் தரிசித்தோர் பரமே பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்.* என்று சிவஞானசித்தியார் கூறுவது இச்சீவன் முத்தி நிலையையே என்பதை உளங்கொள்வாயாக. இந்த நிட்டை நிலையை ஆடைத்தோர்க்கும் பரமுத்தியை எய்தினோர்க்கும் உள்ள வேறுபாடு இது தான்: முன்னவர்க்கு உடம்பு இருத்தலும் பின்னவர்க்கு இல்லாமையுமாகும். ஆகவே, பரமுத்தி அடைந்தோர் உடம்பைத் துறந்து பெறும் இன்பத்தைச் சீவன் முத்தர் உடம்போடு பெறுகின்றனர் என்பதை அறிக. ஆகவே, உடம்பு நீங்கியவுடன் இவர்கள் நேரே சாயுச்சமாகிய பரமுத்தியைப் பெறுவர். அதனால் இவர்களைச் சித்தியார். T3 இருமந்திரம். பாயிரம்.19 கீ#, சித்தியார்.11.2