பக்கம்:சைவமும் தமிழும்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 355 என்னும் இகலோகத்தே முத்தி பெறும் இவன்றான் எங்கெழில்என் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக் கணுதல்தன் கிறைவதனிற் கலந்து காயம் கழிந்தக்கால் எங்குமாய்க் கருதீன்போல் நிற்பன்." என்று கூறும். கொற்றவன் குடி உமாபதி தேவநாயனார், மூதறிவார்க்கு அம்மையும் இம்மையே பாம்" அடைந்தோர் உடம்பு நீங்கிப் பெறும் இன்பத்தைச் சீவன் முத்தர் உடம்பொடு நின்றே பெறுகின்றனர் என்பதை :றித்து தெளிக. இதனால் இவர்கள் உடம்பு நீங்கியவுடன் சிவசாயுச்சமாகிய வரமுத்தியைப் பெறுதலன்றி வேறில்லை என்பதை உணர்ந்து கொள்க. சீவன் முத்தரைத் தமிழில் அனைந்தோர் என்று வழங்குவர். இன்னொரு முக்கிய செய்தியையும் ஈண்டு நீ அறிதல் வேண்டும். குருவருளால் ஞானம் கைவசப் பெற்றோர் அனைவரும் சீவன் முத்தர் நிலையை அடைந்து -- முடியாது. ஞானத்தின்படி நிலைகளே இதற்குக் காரணம். இப் படிநிலைகள் யாவை இவை: ஞானத்திற் சரியை, ஞானத்திற்கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்பவையாம். இவை முறையே குரு உபதேசத் தின்வழி சிவ முதற்பொருளே ஏனைய எல்லாப் பொருல் கும் பற்றுக் கோடு எனக் கேட்டல், பின் அதனை நூல்களும் பொருந்துமாறு சிந்தித்தல், பின் அதுவே உண்மையென ஒரு தலையாகத் துணிதல், பின் பிறபற்றுகள் ஆற்று அச் சிவத்தில் அழுந்துதல்" என்பவையாகும் என்பதை அறிக் ് 5. ♔ 8, 31 48. திருவருட்டியன்" 10,9. 47. சித்தியார்-,ே24