பக்கம்:சைவமும் தமிழும்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சைவ சமய விளக்கு இவற்றுள் இறுதியிற் கூறிய அழுந்துதல் என்னும் திட்டை நிலையாகிய ஞானத்தில் ஞானம்’ என்னும் நிலையே சீவன் முத்தி நிலையாகும் என்பதையும் ஆறிந்து தெளிக. உயிர்கள்தோறும் ஆணவமலப் பிணிப்பு ஒருவகையாக இல்லாமல் வெவ்வேறு வகையாய் இருக்கும் என்பதை நீ நன்கு அறிவாய். இதனால் அதன் பரிபாக நிலையும் அதற் கேற்ப நிகழும் சத்தி நியாத நிலையும் பல்வேறு வகையாக இருக்கும் என்பதும் உனக்குத் தெரியும். ஆகவே குரு வருளால் ஞானத்தைக் கேட்டல் என்னும் அளவில் பெற்ற வுடனே எல்லோர்க்கும் நிட்டை நிலையாகிய சீவன்முத்தி நிலை எளிதில் கை கூடுவதில்லை. அதன்பின் சிந்தித்தல் தெளிதல்கள் நிகழ்ந்த பின்னர்தான் அது கை கூடுவதாகும். இனிச்சிந்தித்தல் தெளிதல்கள்களும் எல்லோர்க்கும் ஒரு வகையாக நிகழ்வதில்லை; பல்வேறு வகைப்பட்ட மந்தமாக வும் தீவிரமாகவும் நிக்ழும். அதி தீவிரத்தில் தீவிரம்" என்னும் நிலை வரும்பொழுதுதான் நிட்டையிலே நிற்ற லாகிய சீவன் முத்தி நிலை கூடுவதாகும். அதிதீவிரத்தில் அதிதீவிரமான தமது நிலையையே மணிவாசகிப் பெருமான், j விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும விரைகின் கிறேன்" என்று குறிப்பிட்டதையும் எண்ணி ஒர்க. இந்நிலை பலருக்கு இைைமயால்தான் பலர் குருவருளைப் பெற்ற பின்பும் சிவன் முததி நிலையை எய்த முடிவதில்லை. மணிவாசகப் பெருமானும் இந்நிலை தமக்கு வாய்க்கவில்லை என்பதை, வழங்குகின் நாய்க்குன் அருளா ரமுதத்தை வாரிக்கொண்டு 48. இதனா. திருச்சகம்-அறிவுறுத்தல்-1