பக்கம்:சைவமும் தமிழும்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 35? விழுங்கு கின்றேன்.விக்கி னேன்வினை யேன் என் விதியின்மையால்லி என்று குறிப்பிடுவதையும் காண்க. ஆகவே, இந்நிலை, வாய்த்தல் என்பது அரிதினும் அரிதாகும் என்பதை உளங் கொள்க. ஞானத்தின் மேற்கூறிய இந்தப் படி நிலை களையே வேறொரு வகையில் பத்தாகப் பகுத்து'தசகாரியம்’ என்று குறிப்பிடும் சித்தாந்தம். இது ஞானச் செய்தி" என்றும் வழங்கப்பெறும். இதனை அடுத்த கடிதத்தில் விளக்குவேன். அன்பின், கார்த்திகேயன். 傘● அன்பு நிறைந்த கண்ணுதளப்பனுக்கு, நலம். நலமே விளைந்திடுக. இக் கடிதத்தில் தசகாரியம் இன்ன தென்பதைத் தெளி வுறுத்துவேன். சித்தாந்த நூல்களில் குறிப்பிடப்பெறும் கஞானம்' என்பதற்கு அறிவு” என்பதே பொருளாயினும் தத்துவ நூல்களில் அது பொருளியல்பை உள்ளவா றுணரும் உணர்வுக்கே குறியீடாக வழங்கும் என்பதை நீ அறிதல் வேண்டும். அறிதல் என்னும் அளவில் சரியை, கிரியை, யோகம் என்பனவும் ஞானமேயாயினும், சைவ சித்தாந்தம் இவற்றை ஞானம் என்னாது பொருளியல்பை உள்ளவாறு உணரும் உணர்வை-தத்துவ உணர்வை. "ஞானம்’ எனச் சிறந் தெடுத்துக் கூறுதல் இக்கருத்துபற்றியே யாகும். விரும்பும் சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே." 50. தா. பா: பராபரக்கண்ணி- 157