பக்கம்:சைவமும் தமிழும்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ ஆத சமய விளக்கு என்று தாயுமான அடிகள் சரியை முதலியவற்றையும் மெய்ஞ்ஞானம்' என் துே: தெய்ப் பொருளை ஒருவாற்றான் அறியும் பொதுமை பற்றியே பாகும் என்பதை அறிந்து சைவசித்தாந்தம் கூறும் முறையில் பொருளியல் புகளை உணர்வதே உண்மை ஞானமாகும். சைவு சித்தனந்தம் பொருளின் எண்ணிக்க வகையால் மூன்று என்றும். அவற்றின் இயல்பு தடத்தம்,சொரூபம்' என இரண்டு என்றும், அவற்றிடையே உள்ள தொடர்பு சுத்தாத்து விதம்’ என்றும், நிலை வேறுபாடுகள் பெத்தம் முத்தி என இரு திறப் பட்டுப் பிறிதோராற்றால் கேவலம் சகலம், சுத்தம் என மூன்றாகி ஒவ்வொன்றிலும் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி: துளியம், தூதரியாதீதம் என ஐந்தாய் மூவைந்து பதினைந்தாய் விரியும் என்றும் கூறுதலால் அவ்வாறு அவற்ய்ை உணரும் ஞானமே சித்தாந்த ஞானம் ஆகும். இந்த ஞானமே கேட்டல் முதலிய நான்காகுமிடத்துப் பத்தாகி விரியும், இவை தத்துவ ரூபம் தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி, ஆன்ம ரூபம், ஆன்ம தரிசனம்,ஆன்மசுத்தி, சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்பனவாகும் என்பதை அறிக. இவன் கூறிய பத்தும் உடற்செய்கைகளன்று. இவை அறிவுச் செய்கையாகிய ஞானச் செய்திகளேயாதலின், இவை அறிவின்கண் நிகழும் நிலை வேறியாடுகளேயாகும் என்பதை அறிக. இங்குக் கூறப்பெற்ற நிலைகளுள் தத்துவம், ஆன்மா, சிவம் என்ற மூன்று பொருள்களும் முறையே பாசம், பசு, பதி, எனப்படுவதை நீநன்கு அறிவாய். ஆணவம் மாயை, கன்மம் என்ற மூவகைப் பாசங்களுள் மாயையின் காரியமாகிய தத்துவம் ஒன்றே இங்குக் கூறப்பெறுகின்றது. இதனை உலகம்’ என்று பொதுவாகக் கூறலாம். ஆயினும் *உலகம்’ எனக் கூறினால் உடலையும் மனம் முதலிய பிற கருவிகளையும் அது தெளிவாக விளக்க மாட்டாதாதலின் "உலகம்" என்ற சொல்லுக்குப் பதிலாகத் தத்துவம் என்ற சொல்லே ஆளப்பெற்றுள்ளது தத்துவம் என்ற அளவில்