பக்கம்:சைவமும் தமிழும்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் ః స్త్రీ థ్ర அ:ைற்றின் காரியமாகிய தாத்துவிகங்களும் கொள்ளப் படுதல் மரபு என்பதையும் அறிக. மூவகைப் பாசங்களில் மாயையை மட்டுமே கூறியதற் குக் காரணம் என்ன? இதுவே ஏனைய எல்லாவற்றையும் விடப் பருப்பொருளாய் நின்று உயிரை மகக்கித் தனக்கு வேறாய் உள்ள பொருளை நோக்காது தன்னையே நோக்கும்; அஃதன்றியும் தனக்கு மேல் வேறொரு பொருள் இல்லை என்று எண்ணும் எண்ணத்திற்கும் காரணமாய் நிற்கும். ஆகவே, முப்பொருளின் இயல்பை உள்ளவாறு உணரும் நிலை வேறு சாடே இங்குத் தசகாரியம்’ எனப்படு கின்றது என்பது இனிது தெளிவாகும். இனி, தத்துவங்களைப்பற்றியும், ஆன்மாவைப்பற்றி பும் கூறுமிடத்தில் ரூபம், தரிசனம், சுத் தி என்று மூன்று நிலைகள் சொல்லப்பட்டிருத்தலை ஈண்டு நினைவு கூர் சு. இவற்துள் ரூபம்' என்பது பொதுவாக (நிருவிகற்பமாய்) அறிதல் என்றும், தரிசனம் என்பது ஐயமாக அறிதல் என்றும், கத்தி என்பது தெளிவாக அறிதல் என்றும் தெரிந்து கொள்க. சிவத்தைப்பற்றிக் கூறுமிடத்தில் நுவலப்பட்ட ரூபம்; தரிசனம் என்பவற்றிற்கும் இவையே பொருளாகும். ஆயினும், தத்துவத்தைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் தெளிவாக அறிதலை சுத்தி என்று சொல்வது போலச் சிவத்தைத் தெளிவாக அறிதலைச் சுத்தி’ என்று சொல்வ தில்லை. ஏனெனில், தத்துவத்தைப்பற்றியும் ஆன்மாவைப் பற்றியும் தெளிவாக அறிதலின் பயன் அவற்றால் வரும் மயக்கத்தினின்றும் நீங்குதலேயாகும். ஆதலின் அவை "சுத்தி எனப்படுகின்றன. சிவத்தைப்பற்றித் தெளிவாக அறிதலின் பயன் அதனை விக்டு நீங்காது அதற்கண் அழுந்தி இன்புறுதலேயாதலின் அது 'கத்தி எனப்படுதல் இல்லை என்பதை அறிந்து தெளிக