பக்கம்:சைவமும் தமிழும்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盏器旨 நிலையில் நீங்காது"நிற்போர் மிக மிக அரியர். மீளவும் தெளிதல் நிலைக்கு வருதலும், நிட்டையிற் செல்லுதலு மாகிய வரவு போக்குகளை உடையவரே பலராவர். இந் நிலையில் உடம்பு நீங்குதற் கண் நிட்டை நிலையிலே நீங்காது நிற்கப்பெற்றோரே இறைவனோடு இரண்டறக் கலத்தலாகிய சாயுச்ச பரமுத்தியைப் பெறுவர்; இந் நிலையில் நிற்கப் பெறாதோர் அபரமுத்தியைப் பெற்றுப் பின்னர்ப் பரமுத்தியை அடைவர். இனி, மேலே குறிப் பிட்ட தத்துவ சுத்தி முதலிய பத்தையும் சிறிது விணக்கு வேன். தத்துவ ரூபம் முதலிய மூன்று : ஆசிரியரின் உபதேசத் தைப் பெற்ற பின்னர் அதனை நூல்களின் துணைக்கொண் டும் தம் அறிவுக்குப் பொருந்துமாறும் ஆராய்தலே "சிந்தித்தல்’ என்பது, இங்ஙனம் சிந்திக்கும்கால் முப்பத் தாறு தத்துவங்களின் இயல்பையும் நூல்களில் நுவலப் பெற்றவாறே விளங்கிக் கொள்ளும் அளவில் அறிதல் தத்துவரூபம் ஆகும். இதில் நிகழ்வது பொது உணர்வே யாகும் என்பதை அறிக. பின்னர், இங்ங்ணம் சொல்லப் பெற்ற இவை பொருந்துமா எனத் கன்னறிவால் வைத் து ஒர்தல் தத்துவதரிசனமாகும். இதில் பொருந்தும் என்றும் பொருந்தாது என்றும் இரண்டு பட்ட உணர்வே தோன்றும். இஃது ஐயுணர்வாதல் வெளிப்படை. அதன்பின் ஆசிரியர் உபதேசித்தபடியும், நூல்களில் சொல்லியபடியும் தத்து வங்கள் அனைத்தும் ஆன்ம அறிவு இல்வழிச் செயற்படாத சடப்பொருள்களே என்பதும் ஆதலின் இவை ஆன்மா அல்ல; ஆன்மாவின் வேறு என்பதும் உண்மையாதலை உணர்ந்து வியப்புறுதல் தத்துவ சுத்தியாம். இது துணி புணர்வு என்பது தெளியப்படும். இத் துணிபுணர்வு பிறந்த பின் உயிர் அச்சடப் பொருள்களை உவர்த்து அவற்றின் நீங்கு தற்கு இடைவெளி இன்மையால் இது தத்துவ சுத்தியா தற்கு தடையின்மை அறிந்து தெளிக. . ஆன்மரூபம் முதலிய மூன்று : தத் துவங்களின் இயல்பை நூல்களிற் சொல்வியவாறு அறிந்து கொள்ளுதல் போல,