பக்கம்:சைவமும் தமிழும்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3器畿 சைவ இக் விளக்கு "தத்துவங்களோ அல்லது அவற்றின் கூட்டமோ ஆன்மா அல்ல; ஆன்மா வேறு என்பதையும் அதன் இயல்புகளை யும் நூல்களிற் சொல்லியவாறு அறிந்து கொள்ளுதலே ஆன்மருபம் என்பது. அதன்பின் அவற்றைத் தன் அறி விற்குப் பொருந்துமாறு ஆராய்தலே ஆன்மதரிசனமாகும். இவ்வாறு ஆராய்ந்தபொழுது, ஆன்மா தத்துவங்கள் போலச் சடமாகாது சித்தே என்றாலும், பிரிதொன்றன் துணையின்றித் தனித்து நின்று அறிய இயலாது. ஆதவின் அதற்கு எஞ்ஞான்றும் துணையாய் உடன் நின்று உணர்த்தி வருவது முதல்வன் திருவருளே என்பது இனிது விளங்கும், ஆதலின் அவ் விளக்கத்தின்வழித் தனக்கென ஒரு செயலு மின்றி, எல்.வாம் முதல்வன் செயலாக உணர்ந்து தன் செயலற்று இருத்தல் ஆன்ம சுத்தியாகும். இவ்ற்றால் எந்த ஒன்றே பாயினும் யான் செய்தேன் அல்லது பிறர் செய்தார்’ என்று எண்ணுதலும், ஒன்றை "என்னுடையது” அல்லது பிறருடையது' என்று எண்ணுதலும் ஆகிய 'யான் எனது என்னும் செதுக்கு அற்றொழியுமாதலின் இதுவே ஆன்ம சுத்தியாதல் அறிந்து தெளிக. சிவரூபம் முதலிய நான்கு : இவற்றையும் தெளிவிப் பேன். தத்துவங்களின் இயல்பு, ஆன்மாவின் இயல்பு இவற்றை நூல்களில் கூறியவாறே கொள்ளுதல் போல, சிவத்தினது-பொது வியல்பு தடத்த இலட்சணம்உலகத்தை ஐந்தொழிற்படுத்தல் உண்மை இயல்பு (சொரூப இலட்சணம்-என் குணம் உடைமை) நூல்களில் சொல்லியவாறு அறிந்து கொள்ளுதல் சிவரூபம் ஆகும். பின்னர் அவற்றைத் தன்னறிவிற்குப் பொருந்துமாறு ஆராய்தல் சிவதரிசனம். சிவத்தினது இயல்பு இவ்வாறு அறிவிற்குப் பொருத்தமாதல் தோன்றும்பொழுதே முன்னர்க் கூறிய யான், எனது அரிற நிலைமை நிலை பெறுதலும், அதனால் எங்கும் சிவமாய்க் காணும் காட்சி யும், அக் காட்சியால் சிவானந்த விளைவும் உண்டாகும். ஆகவே, இந் நிலையே சிவத்தை உண்மையில் காணும் சிவ தரிசனமாகும். -