பக்கம்:சைவமும் தமிழும்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

స్త్రీ சிவதரிசனம் வாய்த்தபொழுதும் பழைய வாசனை பற்றி 'யான் செய்தேன்; பிறர் செய்தார்; என்னுடையது; பிறருடையது' என்று என்னும் தற்போதம் அல்லது சிவ போதம் எழும். இதனை அச்சிவ தரிசன முறையில் சிந்தித்து அடக்கித் தன் செயற்றுச் சிவத்தில் ஒன்றி இருத்தலே சிவ யோகம் ஆகும். இதுவே உண்மை யோகம்; ஏனைய யோகம் பொது போகமே என்பதை அறிக. - சிவயோகத்தில் ஆன்மா நிலைத்து நிற்கும்போது சிவானந்தம் தோன்றும். ஆதலின் அதனை நுக நுகர அஃது ஒரு காலைக்கொருகால் மிகுந்து பெருகி ஆன்டி அறிவைத் தன்னுள்ளே விழுங்கிக் கொள்ளும். பானாகிய என்னை விழுங்கிவெறுங் தானாய் கிலை கின்றது. தற்பரமே." என்ற திருவாக்கில் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையே என் பதை அறிக, ஆன்மபோதம் அறவே மூழ்கடிக்கப்பட்ட பின்னர், ஆன்மா தன்னையோ, பிறரையோ, பிறபொருள் களையோ உணரும் நிலைமை எப்படி இருக்க முடியும்? ஆகவே, இந்நிலையில் சொல் இல்லை; செயல் இல்லை; மனம் இல்லை; இரவில்லை; பகல் இல்லை; எதுவுமே இல்லை. இதுவே சிவயோகம் என்பதை அறிந்து தெளிக. இதற்குமேல் ஆன்மா அடைய வேண்டிய பயன் யாதொன் றும் இல்லை. இச் சிவானந்தத்தை இடையறாது அது பவித்தற்கு உடம்பு ஒரு சிறுதடையாகும். அது நீங்கினால் நிறைபேரின்ப நிலையாகிய பரழுத்தி கிலை வாய்த்துவிடும் என்பதை அறிக. இங்ங்னமாகக் கூறப்பெற்ற தச காரியங்கள் மேற் கூறியவாறு முறையாகக் கூறப்பெற்றனவாயினும், அவை ஒன்று நிகழ்ந்து முடிந்த பின்னர்தான் மற்றொன்று நிகழும் என்று கருத வேண்டா. ஒன்று பெரிதும், மற். T5 கிங் இது:இ-இன்