பக்கம்:சைவமும் தமிழும்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

德器毒 சைவ சமய விளக்கு றொன்று சிறிதும், இன்னொன்று அதனிற் சிறிதுமாக எல்லாம் உடன் நிகழ்வனவேயாகும். ஆகவே, பெரிதாய நிலைபற்றிய பெயர் கூறப்படுவது என்பதை அறிக. எனவே, கீழ் கீழ் உள்ளவை நிலைபெறுதல் மேன் மேல் உள்ளவற்றினாலாம். ஆகவே, தத்துவ தரிசனத்தால் தத்துவ ரூபம் நிலை பெறும் ஆன்ம ரூபத்தால் தத்துவ தரிசனம் நிலை பெறும். ஏனையவற்றையும் இவ்வாறு முறைப்படுத்தி அறிந்து தெளிக. இதனை ஒர் எடுத்துக் காட்டால் விளக்கலாம், திருவேங்கடம் மலைமீது பேருந்தில் செல்லுங்கால் சிறிது மேற்சென்றபொழுது கீழ் உள்ள பொருள்கள் தெளிவாகத் தோன்றுதலைக் காணலாம், மிகவும் மேலே சென்று விட்ட பொழுது கீழே உள்ள பொருள்கள் தோன்றாது மறைதலையும் உணரலாம். இதுபோலவே இவையும் அநுபவமாகும் என்பதை உணர்ந்து தெளிக. இன்னொரு முக்கியமான செய்தியையும் ஈண்டு நீ அறிந்து தெளிதல்வேண்டும். கேட்டல், சிந்தித்தல், தெளிதல்,நிட்டை கூடல் என்னும் நான்குமே ஞானத்தின் ாடிகளாகும் என்பதை நீ நன்கு அறிவாய்,இந்த நான்கிலும் தசகாரியங்கள் என்ற படிநிலைகளும் அடங்கும். இதனை ஈண்டு விளக்குவேன். இந்த இரண்டு வகைப் படிநிலை களையும் உற்று நோக்கின், கேட்டல் முதலிய நான்குமே தத்துவரூபம் முதலாகச் சொல்லிய பத்தாகக் காணப்படு கின்றன என்பது தெளிவாகும். துகளறு போதம் முதலிய சில நூல்களில் இவை முப்பது என்று இன்னும் விரித்து விளக்கப்பெறுகின்றன. தசகாரியத்துள் ரூபம்’ என்பன மூன்றும் கேட்டலில் அடங்கும்; தரிசனம் என்பன மூன்றும் சிந்தித்தலில் அடங்கும்; தத்துவ சுத்தி, ஆன்ம சுத் தி, சிவயோகம் என்னும் மூன்றும் தெளிதலில் அடங்கும்: சிவயோகம் திட்டையில் அடங்கும். இவற்றையும் அறிக’ சிவப்பிரகாசம் என்னும் நூல் இவற்றை வேறு வகையாகப் பிரித்துப் பேசும். இவையெல்லாம் வேறு வேறு போலும்