பக்கம்:சைவமும் தமிழும்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36? பினும், ஆன்மா அவற்றை முறையே அந்தக் கரணங்கள் வழியாகவும், தனது யோகத்தின் வழியாகவும் நேரே விடுதலும் பற்றுதலும் உடையதாய் இருக்கும் என்பதை அறிக. கேவல ஐந்தவத்தைகளில் குறைந்தும் கூடியும் வரும் கருவிகள் முப்பத்தைந்து. அவை ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று ஆகத் தத்துவம் பதினைந்தும்; ஞானேந்திரிய விடயங்கள் (புலன்கள்) ஆகிய சத்தம் முதலிய ஐந்து, கன்மேந்திரிய விடயங்களாகிய வசனம் முதலிய ஐந்து, பிராணன் முதலிய வாயுக்கள் பத்து ஆகத் தாத்துவிகங்கள் இருபதும் ஆகும் என்ற விவரங்களை அறிக. கேவல சாக்கிரத்தில் இக்கருவிகள் யாவும் மெத்தென இயங்குமேயன்றி ஒன்றேனும் இல்லாமல் நீங்காது. கேவல சொப்பனத்தில் ஞானேந்திரியம் ஐந்தும், கன்மேந் திரியம் ஐந்தும் ஆக பத்தும் நீங்க, ஏனைய இருபத்தைந்தும் தொழிற்படும். கேவல சுழுத்தியில் அவ்விரு Q屏怒穆筠 இந்திரியங்களாகிய சத்தம் முதலிய ஐந்தும், வசனம் முதலிய ஐந்தும், அந்தக்கரணங்களில் சித்தம் தவிர ஏனைய மூன்றும், வாயுக்களில் பிராணன் தவிர ஏனைய ஒன்பதும் ஆக இருபத்திரண்டு கருவிகள் நீங்க, சித்தம், பிராணன், புருடன் என்னும் மூன்று கருவிகளே தொழிற் படும். கேவல துரியத்தில் சித்தம் நீங்க, மற்றைய இரண்டும் தொழிற்படும். கேவல துரியா தீதத்தில் பிராணனும் நீங்க, புருடன் ஒன்றே நிற்கும். இங்குக் கூறிய கருவிகளில் குறை வனவாகவும், பின் கூடுவனவாகவும் உள்ள கருவிகள் ஆன்ம தத்துவ தாத்து விகங்களேயாதல் அறியத் தக்கது. கேவலசாக்கிரம் முதலிய ஐந்திற்கும் இடம் முறையே புருவ நடு, கண்டம் (கழுத்து), இதயம், உக்தி, மூலாதாரம் என்பனவாகும். எனவே, இவ்வவத்தைகளில் ஆன்மா முறையே, இங்ங்ணம் கீழ் இறங்கிச் சென்று மூலாதா ரத்தை அடையும், பின்பு, நீங்கிய கருவிகள் இம்முறையே