பக்கம்:சைவமும் தமிழும்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器爵器 சைவ சமய விளக்கு வந்துகூட ஆன்மா, மூலாதாரத்திலிருந்து மேற் கூறிய இடங்கவில் மேல் ஏறிப் புருவ நடுவை அடையும், இதனால் இழ் இறங்குதல் கீழால் அவத்தை' என்றும், மேல் ஏறுதல் மோலால் அவத்தை’ என்றும் வழங்கப்பெறும்." இவ் விரண்டிலும் ஆன்மா கீழ் இறங்குதல், மேல் ஏறுதல் என்பன தவிரப் பிறிதொரு வேறுபாடும் இல்லை. சகல சாக்கிரம் முதலிய ஐந்திற்கும் இடம் புருவ நடு ஒன்றே அதனால் அவை ஐந்தும் மத்தியால் அவத்தை' எனப்படும். இவை ஐந்தும் பிரோக காண்டமாகிய சுத்த தத்துவம் அல்லதி சிவதத்துவம் எனப்படும் ஐந்தும் குறைதல் கூடுதல்களால் நிகழ்வனவாகும். சகல சாக்கிரத் இல் இவை ஐந்தும் தமக்குக் கீழ் உள்ள கருவிகளைச் செலுத்தலாகிய தம் தொழிலைப் புரிந்து நிற்கும். சகல சொப்பனம் முதலியவற்றில் சுத்த வித்தை தொடங்கிய ஒவ்வொன்றும் நீங்க சகல துரியாதீதத்தில் சிவதத்துவம் ஒன்றே தொழிற்படும் பின்பு அது வந்து கூடும்பொழுது சாதாக்கியம் முதலாக முறையே வந்து கூடும். தத்துவங்கள் தோன்றும் முறைபற்றி முன்னரே கறி புள்ளேன். அவை ஒடுங்கும்பொழுதும் ஆம்முறை யிலே ஒடுங்கும். அதனால் அவற்றை என்னும்பொழுது அவை தோன்றும் முறையில் வைத்து எண்ணுதல் தோற்ற முறை (உற்பத்திக்கிரமம்) என்றும் ஒடுங்கும் முறையில் வைத்து எண்ணுதல் ஒடுக்க முறை (சங்காரக் கிரமம்) என்றும் சொல்லப்படும். யோகாவத்தைகள் சுவாதிட்டானம் முதல் சகித்திரதளம் கதாகவுள்ள ஆதாரங்களும், சகத்திரதளத்திற்கு மேல் பன்னிரண்டு அங்குலமான கிராதாரமும், அதற்கும் அப்பாற் பட்ட மீதானமும் ஆகியவைபற்றி ஏற்ற பெற்றியால் நிகழும் சகத்திரதள இடத்தையே பலவாகக் கூறுதல் உண்டு. 56. இதை முன்னரும் விளக்கியுள்ளேன் இயல் 3: கடிதம் 23; டக் (16 காண்க. .