பக்கம்:சைவமும் தமிழும்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் $盛摄 சுத்தாவத்தைகள்: இங்ங்ணம் உடம்பைப் பற்றி நிகழாது தற்போதம் அல்லது சீவபோதமாகிய ஆன்மபோதத்தைப் பற்றியும் சிவபோதமாகிய ஆருட்சக்திபற்றியும் நிகழும் என்பதை அறிக. யோகாவத்தை, சுத்தரவத்தை என்பவை களையே மேலால் அவத்தை என்பாரும் உளர். உபாய கிட்டை : இனி, உபாய நிட்டை பற்றி விளக்கு வேன். மேற்கூறியவற்றால் சிவயோகமாகிய தெளிதலே "சுத்ததுரியம்’ என்பதும், சிவயோகமாகிய திட்டையே "சுத்த துரியாதீதம் என்பதும் தெளிவாகும். இனி நிட்டை யாகிய அந்த அதீத நிலையை அடைந்தோர் அதன் கண்ணே அழுந்தி மீன்ாது நிற்போரும், பண்டைப் பயிற்சி வயத் தால் மீள்வோரும் என இருதிறத்தினர் ஆவர். இவ்வாறு மீள்வோர் முன்போலக் கீழ்நிலையை எய்திப் பந்தத்தில் வீழ்ந்து கெடாது மேல் ஏறி நிட்டையின்கண் அழுந்து தற்பொருட்டுத் துரிய நிலையிலே நின்று முத்தி பஞ்சாக் கரத்தை முறைப்படி சுத்த மானதமாகக் கணித்தலும், தம்மைப்போலும் துரிய நிலையை எய்திய அன்பரோ டன்றிப் பிறரோடு கூடாது குருலிங்க சங்கமங்களைச் சிவனாகவே அறிந்து வழிபட்டு, உலகரோடு ஒட்டி வாழ்த் தும் தாமரை இலையில் தண்ணீர்போலப் பற்றின்றிச் சிவனோடு ஏகராகி அவனருள் வழியன்றி ஒன்றும் செய்யா ராய்த் தற்போதத்தைத் தவிர்த்து நிற்பர். இவர்க்கு அவர் பெற்ற சின்றின்பம் பேரின்பமாகவே விளையும். இதனால் அவர்க்கு ஆகாமியமும் அதுவழியாக வரும் பிறப்பும் இல்லை. இந்நிலையே உபாயகிட்டை என்றும் சாக்கிரத்தில் அதிதக்கப் புரிதல் என்றும் வழங்கப்பெறும். நிட்டையாகிய அதிக நிலையினின்றும் மீளும் தன்மை இல்லாத பெரு மக்களையும் உலகத்தை உய்வித்தற் பொருட்டு இறைவன் இத் துரிய நிலைக்கண் மீள்வித்தல் உண்டு என்பதற்குச் சில அருட்டிரு மொழிகள் சான்று களாக அமைகின்றன. . - சை, ச. வி-24