பக்கம்:சைவமும் தமிழும்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனியல் 373 நிட்டை நிலையிற் செல்லுமுன்னே அது கைவருதற் பொருட்டு துரிய நிலையில் நிற்பாரும் உளர். அவர் ஒராற் றால் ஆசாரியராதலன்றி, மெய் கண்டதேவர் முதலியோர் போலப் பரமாசாரியராகார் என்பதை அறிக. அன்பன், கார்த்திகேயன். 凰鲇 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு நலன். நவனே வினைக. இக் கடிதததில் அணைந்தோர் தன்மையைப்பற்றிச் சில சொற்கள். சீவன்முத்தரே அனைத்தோர் என்றும் சொல்லப் பெறுவர். அணைந்தோரி என்பதற்குச் சிவனை அணைந்தோர் என்பது பொருள். நிட்டை நிலையில் சிவனை அணைந்தோர்க்கும் குருவிங்க சங்கம வழிபாடும் பிற சமய நெறிகளும் தேவைதான் என்பதை சண்டு விளக்குவேன். நிட்டை நிலையில் நின்று தம்மை மறந்தவர்கட்கு குருலிங்க சங்கம வழிபாடும் உறங்கினோன் கைப்பொருள் அவனறியாது தாழ்ே வீழ்ந்தொழிதல் போலத் தாமே நீங்கிவிடும். அவ்வாறு நீங்காமல் அவற்றைத் தற்போதத் தால் தாமே வேண்டா என விலக்கின், பிற செயல்கள் வந்து பற்றும். பற்றவே, அவற்றில் இச்சையுண்டாகி மீளவும் பிறப்பிற்கு ஏதுவாகும். இவ்வழிாட்டைத் தற்ப போதத்தால் விலக்கச் செய்வதும் மலவாச்னையே யாகும். அதனால் அவ்வாசனை தாக்காதிருத்தற்பொருட்டு மேற் சொல்விய அனைத்தும் எவ்வாற்றாலேனும் துரிய நிலைக் கண் நிற்பார் விட்டொழித்தல் கூடாது என்பதை உளங் கொள்க.