பக்கம்:சைவமும் தமிழும்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑒?尋 சைவ சமய விளக்கு இவ்விடத்தில் இன்னொரு முக்கிய செய்தியையும் நீ அறிதல் வேண்டும். அதாவது சரியை முதலிய சாதனங் களில் நிற்பவர்கட்கும் சாத்தியமாகிய ஞானத்தைப் பெற்றவர்கட்கும் இடையேயுள்ள வேறுபாடு என்ன என்பது. பொருளற்ற வறியவர்கள் பொருளைப் பெறு தற்கு ஒடியாடி உழைக்க வேண்டும்; இது இன்றியமை யாதது. பொருளுடைய செல்வர்கட்கும் சோம்பல் கூடாது; உழைப்பு வேண்டும்’ என்று சான்றோர்கள் கூறும் கருத்துதான் யாது? வறியவர்கள் பொருளைப் பெறு வதற்கும் செல்வர்கள் பொருளை அழியாமற் காத்திற்கும் உழைக்கின்றனர் என்பதை நினைவில் இருத்துக. பொரு ளாட்சி போற்றாதார்க்கு இல்லை" என்ற வள்ளுவர் வாக்கையும் ஒர்ந்து உணர்க. மேற்கூறிய முறைதான் சரியை முதலிய சாதனங் களில் நிற்பவர்கட்கும் ஞானத்தைப் பெற்றவர்கட்கும் இடையே உள்ளது, சாதனங்களில் நிற்போர் ஞானத்தைப் பெறவேண்டிக் குருவிங்க சங்கம வழிபாட்டை மேற் கொள்ளுகின்றனர்; ஞானத்தைப் பெற்றவர்கள் அது நீங்காது நிலைத்து நிற்றல் வேண்டி இவ் வழிபாட்டை மேற்கொள்ளுகின்றனர். அவ்வாறாயினும் வறியரது உழைப்பிற்கும் செல்வரது உழைப்பிற்கும் வேறுபாடு பெரிதாய் இருத்தல்போல சாதனத்தில் நிற்போரது வழி பாட்டிற்கும் சாத்தியமாகிய ஞானத்தை அடைந்தோரது வழிபாட்டிற்கும் வேறுபாடு பெரிது என்பதை அறிக. இனி, இந்த வேறுபாடுகளை விளக்குவேன். முதலா வது வேறுபாடு அஞ்செழுத்தின் வகைகளாகிய தூலம், சூக்குமம், காரணம் முதலியவை. இவற்றை உபதேசம் பெறும் ஆசாரியரிடமிருந்து அறிந்து கொள்க, இவற்றிற் تضم منهم مصمحسس جمهaبمصر. 67. குறள்-2, 5