பக்கம்:சைவமும் தமிழும்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3?。 கேரியப் காவனை எனப்படும் கருத்து வகைகளும் வேறு வேறாகும். இவற்றைக் கூறுவேன். க்ரியையில் நிற்போர் குரு லிங்கங்களாகிய திருமேனி களையும், சங்கமங்களில் திருநீறு, கண்டிகை முதலிய திருக் கோலங்களையும் சிவன் எனக் கண்டு வழிபடுவர். இவர் கட்குச் சிவபிரான் எக்காலத்தும் வெளிப்படாது அங்கு மறைந்து நின்றே அருள்புரிவான். கிரிகையில் நிற்போர் மேற்கூறிய இடங்களில் அவ்வவற்றைத் தாம் போற்றும் மறை மொழிகளாலும், அம் மறைமொழிக்கேற்பத் தாம் எண்ணும் எண்ணத்தினாலும் செய்கைகளினாலுமே அங்குச் சிவ விளக்கம் .ண்டாவதாகக் கொண்டு வழிபடுவர். இவர் கட்குச் சிவபெருமான் விறகைக் கடையும்பொழுது நெருப் புத் தோன்றுதல்போல அவ் வழிபாட்டில் தோன்றி அருள் புரிவான். யோகத்தில் நிற்போர் யோகியரது உள்ளங் களிலே அவர்கட்கு அவர் கருதும் வடிவில் காட்சி யளிக் கின்ற அப் பெருமானே இங்கும் இவ் வடிவில் இயங்கு கின்றான்” எனக் கொண்டு வழிபடுவர். இவர்கட்குச் சிவபிரான் பசுவின் கடியில் கறந்தால் வெளிப்படும் பால் போல அக் கருத்தின்வழி வெளிப்பட்டு அருள்புரிவன், ஞானிகள் எப்பொருளிலும் ஒழிவற நிறைந்து நிற்கும் இறைவன் தான் விளங்கி நின்று அருள்செய்தற் பொருட்டுக் கொண்ட இவ் விடங்களிலும் அவ்வாறு நிற்கின்றான் என்று அவன் அருள் வழியில் வழிபடுவர். இவர்கட்குச் சிவ பிரான் கன்றை நினைந்த பசுவின் மடியில் பால் தானே விம்மி ஒழுகுதல் போலத் தானே இனிது வெளிப்பட்டு அருள் புரிவான். மேற்கூறிய வழிபாடு தோற்றத்தில் ஒன்றுபோலக் காணப்படினும், கருத்திலும் பயனிலும் பெரிதும் வேறுபட்டு நிற்கும் என்பதை ஒர்ந்து உணர்க. ஆகவே, சைவசித்தாந்தத்தில் தொடக்கம் முதல் இறுதி வரையில் எந்நிலையிலும் திருநீறு, உருத்திராக்கம், திருவைந்தெழுத்து என்பவற்றுடன் குருவிங்க சங்கம வழி காடும் யாவர்க்கும் உய்தி தரும் சாதனங்களாகக் கூறப்படு