பக்கம்:சைவமும் தமிழும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. சைவ சமய விளக்கு பிணித்துள்ள கட்டு. இவை தமிழில் முறையே இறை, உயிர், தளை என்று சொல்லப்படும் என்பதையும் அறிவா யாக. சைவ சித்தாந்தப்படி இந்த மூன்றும் தனித் தனிப் பொருள்களாகும். இவை எந்தப் பொருளின் காரிய மும் அன்று என்பதை உளங்கொள்வாயாக. இந்த மூன்று பொருள்கட்கும் எந்நாளிலும் தோற்றமும் இல்லை; முடிவும் இல்லை. தோற்றம், முடிவு அற்ற பொருள் அநாதி'யாகும்; அஃதாவது ஆதி இல்லாதது. ஆதி இல்லையாதலின் அந்தமும் இல்லை. இதனை, பதிபசு பாசம் எனப்பகள் மூன்றின் பதியினைப் போற்பசு பாசம் அகாதி." என்று தெளிவுபடுத்துவர் திருமூலர். 'எனவே, பதியாகிய கடவுள் என்று உண்டோ, அன்றே பசுவாகிய உயிரும் உண்டு; அன்றே அவ்வுயிர்களைப் பிணித்துள்ள பாசம் உண்டு என்பது சைவ சித்தாந்தத்தின் முடிந்த முடி பாகும் என்பதை உளங்கொள்வாயாக. இவற்றைத். தனித்தனியே பின்னர்த் தெளிவாக்குவேன். இவற்றுள் பதிப்பொருள் ஒன்றேயாகும்; இரண்டாவது இல்லை என்பதைத் தெளிக, பசுக்கள் எண்ணில. பாசம் மூன்று; அவை ஆணவம், கன்மம், மாயை என்பனவாகும். இவை உயிரைக் கட்டுப்படுத்தல்பற்றிப் பாசம் எனப் படுதல் போல, உயிர்களின் தூய்மையைக் கெடுத்து நிற்றலாலும், பின்னர் அகற்றப்படுதலாலும் மலம்' எனவும் வழங்கப்பெறும். மலம்-அழுக்கு. கமும்மலங்கள்’ என்ற வழக்கையும் உன்னுக. - மேலே குறிப்பிட்ட பதி பசு பாசம் என்ற மூன்று பொருள்களும் தோற்றமும் அழிவும் இல்லாது என்றும் உள்ள பொருள்கள் என்ற உண்மை சற்காரிய வாதம்’ 2. திருமந், முதல்தந்திரம், உபதேசம்.ே