பக்கம்:சைவமும் தமிழும்.pdf/411

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尊戀 அன்புநிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலம். நலம் பல விளைவதாகுக. இக்கடித்தில் ஆலய வழிபாட்டைப்பற்றிச் சில கருத்து களைத் தருவேன். எங்கெங்கெல்லாம் அழகு பொலிகின் றதோ அங்கங்கெல்லாம் இறைவன் இருக்கின்றான் என்பது ஒரு தத்துவம். இயற்கை முழுவதிலும் அழகு உண்டு. சில இடங்களில் , அமைந்துள்ள அழகு நம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகின்றது. மனத்தில் மேலான எண்ணத்தை ஊட்டுவதற்கு இத்தகைய அழகு பயன்படு கின்றது. உயர்ந்த எண்ணங்கள் மனத்தில் உதிப்பதற்கும் அவற்றைச் சிந்திப்பதற்கும் அழகிய இடங்கள் பெரிதும் பயன்பட்டு வந்துள்ளன. ஓர் இடத்தில் உதித்த உயர்ந்த எண்ணம் பிறகு அந்த இடத்திற்கே புதிய அருன் சத்தியை நல்குகின்றது. உயர்ந்த எண்ணம் அழிவற்றது என்பதும் ஆன்றோர்கள் துணிபு. அவர்கள் எண்ணிய உயர்ந்த எண்ணங்களும் இயற்கையின் பொலிவும் ஒன்று சேர்ந்து ஒர் இடத்தைப் புண்ணியத் தலமாக்குகின்றன . புண்ணியத் தலத்திற்கு மூல மகிமை இங்ங்ணம் அமை கின்றது. தவசிகளும் முனிவர்களும் பல காலங்களில் பல இடங் களில் வதிந்து வந்துள்ளனர் என்ற செய்தியை வரலாறு நமக்குத் தெரிவிக்கின்றது. அன்னவர்களின் சிந்தையில் உயர்ந்த எண்ணங்கள் ஓயாது உதித்து வந்தன. இந்த எண்ணங்களின் வலிவால் அவர்கள் வதிந்த இடங்கள் புண்ணியத் திருக்கோயில்களாகிவிட்டன. உயர்ந்த கருத்து களைத் தம் மனத்திலே வளர்க்க முயலுகின்றவர்கள் இப் புண்ணியத் தலங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.