பக்கம்:சைவமும் தமிழும்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 சைவ சமய விளக்கு புண்ணியத்தலங்கள் என்பவை ஆன்ம சாதனத்தில் மேல் நிலைக்குப் போக முயல்கின்றவர்கட்கு முற்றிலும் அநுகூல மான சூழ்நிலையாக அமைகின்றன. சாதகர்கள் எண்ணும் மேலான எண்ணங்களுக்குத் தலங்கள் என்னும் சூழ்நிலைகள் மேலும் துணை புரிகின்றாம். இந்தக் கோட்பாட்டை அடிப் படையாகக் கொண்டே நம் நாட்டில் புண்ணியத் திருக் கோயில்கள் பல தோன்றியுள்ளன. நாயன்மார்களின் பாடல் பெற்ற தலங்கட்கும் ஆழ்வார்களின் பாசுரங்களால் மங்களாசாசனம் பெற்ற தலங்கட்கும் என்றென்றும் மறையாத பெருமையும் மகிமையும் இங்ங்ணம் வந்தமைவ தாயின. இன்று நம் நாட்டிலுள்ள பெரிய திருக்கோயில்கள் யாவும் இடைக் காலத்தில் ஏற்பட்டவை. வேத காலத்தில் இவை இருந்ததில்லை; சங்க காலத்திலும் இருந்ததில்லை. இயற்கையின் சூழ்நிலையே வழிபாட்டிற்குரிய இடங்க ளாயின. வேள்வித் தீயின் மூலம் வழிபாடு பெரிதும் நிகழ்ந்து வந்தது. நதிக் கரைகளிலும் மரச் சோலைகளிலும் தெய்வ வழிபாடு நிகழ்ந்து வந்தது. பண்டைய இலக்கிய மாகிய பரிபாடலில், ஆலமும் கடம்பும் கல்யாற்று கடுவுக் கால்வழக் கறுகிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோய் எவ்வயி னோயும் நீயே. என்பதில் திருமால் ஆலம், கடம்பு, யாற்றிடைக் குறை குன்றம் முதலிய இடங்களில் வேறு வேறு பெயரையுடையவ ராக எழுந்தருளியிருப்பதாகக் கூறப்பெற்றிருத்தல் இக் கருத்திற்கு அரணாக அமைகின்றது. நாளடைவில் இத் தகைய விருட்சங்கள் தல விருட்சங்களாயின என்பது அறியத்தக்கது. 3. பரிபாடல்-4; வகி. 87-7).