பக்கம்:சைவமும் தமிழும்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் säi நாளா வட்டத்தில் ஆகமத்தின் அடிப்படையில் திருக் கோயில்கள் கட்டுவிக்கப்பெற்றன. மலையைக் குடைந்தும் ஆலயங்களை அமைத்தனர். இப்படி அமைந்த ஆலயங்கள் மானுட சரீரம் என்னும் ஆலயத் தின் புறச் சின்னங்களாகும். மானுட சரீரமே ஆலயங்களுள் மிகச் சிறந்தது என்பதை எல்லாக் காலத்திலும் ஆன்றோர்களால் அங்கீகரிக்கப் பெற்றுள்ளது. அண்டமெங்கும் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாங்க் குடிகொண்டிருக்கும் தெய்வம் சிறப்பாக மானுட உல்கில் வீற்றிருக்கின்றாக் என்பது ஆன்றோர் வகுத்த கோட்பாடு. உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே. என்ற திருமூலர் திருவாக்கும் இதற்குச் சான்றாக அமை கின்றது. இவரே உடம்பை வளர்ப்பது உயிர்வளர்ப்பப்தற் கொப்பாகும் என்றும் கூறியுள்ளார்." மேற்கூறிய தத்துவக் கருத்தினைப் பாமர மக்கள் அறிந்து கொள்ள முடியாது. பாமரர்களுக்குப் பயன்படும் பொருட்டே ஆலயங்கள் அமைக்கப் பெற்றன என்பதை அறிக. உலகிலும் உடலிலும் உள்ள தத்துவங்களை விளக்கு தற்கு ஆலயங்கள் வந்துள்ளன. நமக்குத் தோன்றியவாறெல்லாம் ஆலயங்களை அமைத்தலாகாது; ஆகமங்களில் விதித்துள்ளபடியே அவை: அமைதல் வேண்டும் என்பது கோட்பாடு. அதற்குத் தக்க காரணம் ஒன்றுண்டு. ஆலயம் ஒன்று உடல் என்னும் ஆலயத்தின் புறச் சின்னமாகும். புறச்சின்னத்தை நமக்குத் தோன்றிய வாறெல்லாம் அமைத்துவிடலாகாது. மூல அமைப்பு ஆகிய உடலிலுள்ள தத்துவங்களுக்கு அஃது ஒத்திருத்தல் 4 திருமந்திரம்-மூன், தந், காயசித்தி உபாயம்-2 க. டிெ. டிெ, டிெ-1