பக்கம்:சைவமும் தமிழும்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3器念 சைவ சமய விளக்கு வேண்டும். ஆகையினால்தான் ஆலயங்களை இன்னின்ன பாங்கில்தான் சுட்டவேண்டும் என்று ஆகமங்கள் கட்டளை யிடுகின்றன. இத்தகைய ஆலயங்களின் மூலம் நம் உட வமைப்பிலுள்ள மகிமைகளையே நாம் மேலும் அறிந்து கொள்ளவேண்டும். தேசப்படத்தின் துணை கொண்டு தேசத்தை நன்கு அறிந்து கொள்வது போன்று கட்டு விக்கப் பெற்றுள்ள ஆலயத்தின் துணை கொண்டு நமக்கு இயல்பாக அமைந்துள்ள உடல் என்னும் ஆலயத்தின் தத்துவங்களை நாம் அறிந்து கொள்ள முடியும். அந்த அறிவிற்கு ஏற்ப வாழ்க்கையைத் திருத்தி அமைப்பதும் நம் கடமையாகும் என்பதை உணர்க. இனி, திருக்கோயிலின் அமைப்பைப்பற்றிச் சில சொற்கள். பெரிய சுற்று (பிராகாரம்) ஒன்று எடுத்து அதற்கு வாயில் ஒன்று அமைக்கப் பெறுகின்றது. அந்த வாயிலுக்கு உயர்ந்த கோபுரம் ஒன்று அமைகின்றது. அது உள்ளிருக்கும் மற்ற கோபுரங்களையெல்லாம்விட உயர்ந்த தாக இருப்பதால் இராச கோபுரம் என்று பெயர் பெறு கின்றது. நெடுந் தொலைவிலிருந்தும் இதனைக் காணலாம். சில பெரிய கோயில்களில் நான்கு திக்கிலும் நான்கு வாயில்கள் அமைத்து நான்கு இராசகோபுரங்களை எழுப்புவதும் உண்டு. நெடுந்தொலைவிலிருந்தும் இந்த இராசகோபுரத்தைக் காணலாம். தூல இலிங்கம் என்றும் இதனை வழங்குவர். கண்ணுக்கு அது புலப்படும்பொழுது அதனையே தெய்வ சொரூபமாகக் கருதி வணங்குவது முறை. தொலைவிலிருப்பவர்கட்கும் இறைவனைப் பற்றி நினைவூட்டுவதற்கே இவ்வமைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கருதலாம். இராசகோபுரத்தின் அருகில் வந்து அதன் ஆமைப்பை நோக்கினால் பல அதிசய உண்மைகள் தெரிய வரும். கனக் கற்ற வடிவங்கள் அதில் அமைக்கப்பெற்றுள்ளன. அவற் றுள்ள மானுட வடிவங்கள் ஏராணம், விதவிதமான வாழ்க்கை முறைகளும் ஆங்கு ஆந்த வடிவங்களில்