பக்கம்:சைவமும் தமிழும்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 33 விளக்கம் பெற்றிருப்பதைக் காணலாம். தேவர்களும் வேண்டியவாறு இடம் பெறுகின்றனர்; தேவர்களின் செயல்களும் கோபுரத்தில் விளக்கப்பெறுகின்றன. விலங்கு களும் பறவைகளும் ஏனைய சிற்றுயிர்களும் அதில் இடம் பெறுகின்றன. இந்த அகிலத்தின் அமைப்பில் இவை: யாவற்றிற்கும் இடம் உண்டு என்பது கோட்பாடு. எல்லாப் படித் தரத்திலும் உள்ள அனைத்தும்-சிற்றுயிர்கள். பேருயிர்கள் விலங்கு இனம். மக்கள் இனம், தேவர்குழாம்ஆங்கு இடம் பெறுகின்றன. இக்கோட்பாட்டை இராச கோபுரம் உருவகப்படுத்தி விளக்குகின்றது. இராசகோபுரத்தில் அருவருக்கத்தக்க சில வடிவங் களும் அமைத்திருப்பதைக் காணலாம், நாகரிகமான பண்புகளுக்கு அவை அறிகுறிகன் ஆகா. மனத்தில் மேலான கருத்துகளைத் தோற்றுவிப்பதற்கும் இவை துணைபுரியா. ஆலய வழிபாட்டிற்குப் பொருந்தாத இத்தகைய பதுமைகள் ஆலயத்தில் இடம் பெறுவதற்கு ஆகம விதிகள் அப்படி இருப்பதே காரணம் என்று சிற்பிகள் சொல்லுவார்கள். இதற்குத் தக்க காரணமும் உண்டு. இயற்கையின் நடைமுறை புறச்சின்னமாகப் பெரிய கோபுரம் அமைந்திருப்பதாகக் கூறினேன். ஆதலால் இயற்கையில் உள்ளவைகளையெல்லாம் இதன் மூலம் விளக்கியே யாகவேண்டும் என்பதை அறிக. நாகரிகம், அநாகரிகம் ஆகிய இரண்டும் இயற்கையில் இடம் பெற்றுள்ளனவன்றோ! பாராட்டத் தக்க பெரு வாழ்வும் பழிக்கத்தக்க சிற்றியல்பும் சிறு செயல்களும் இயற்கையில் இடம் பெற்றிருப்பதைக் காண்கின்றாயன்றோ? ஆதலால் தான் இயற்கையில் நலம் கேடு ஆகிய எல்லாம் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டவே இந்தக் கோபுரம் அமைந் துள்ளது என்பதை உளங் கொள்க: வாழ்க்கையின் குறிக்கோளை விளக்குவதாகவும் இந்தக் கோபுரம் அமைந்துள்ளது. இராசகோபுரத்தின் வாயில்கள் பொதுவாக ஒற்றைப் படையில்தான் ஆமைந்