பக்கம்:சைவமும் தமிழும்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏器座 சைவ சமய விளக்கு திருக்கும். இத்தகைய வாயில்கள் தத்துவத்திற்கு விளக்க மாக அமைந்துள்ளன. மூன்று வாயில்கள் உள்ள கோபுரம் சாக் ஒரம், சொப்பனம், சுழுத்தி (ஸ்-சுப்தி) என்ற மூன்று அவத்தைகளைக் குறிக்கின்றன. ஐந்து வாயில் கள் உள்ள கோபுரம் ஐம்பொறிகளுக்குக் குறியீடாக அமைந்துள்ளது. ஏழுவாயில்கள் உள்ள கோபுரத்தில் மனம், புத்தி என்னும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேர்க்கப்பெறுகின்றன. ஒன்பது உள்ள இடத்தி சித்தம், அகங்காரம் என்னும் இன்னும் இரண்டு தத்துவங்கள் சேர்கின்றன. இங்க ணம் நம்முடைய உடல் அமைப்பில் உள்ள வெவ்வேறு தத்து வங்களுக்குக் கோபுரவாயில்கள் சின்னங்களாக அமை கின்றன என்பதை அறிக. மேற் குறிப்பிட்ட வாயில்களுள் தரை மட்டத்திலுள்ள ஒருவாயில்தான் கோயிலினுள்ளே செல்லுவதற்கு உதவு கின்றது. ஏனைய வாயில்கள் அமைக்கப் பெற்றிருந்தும் அவை ஆலயத்தினுள் புகுவதற்குப் பயன்படுவதில்லை. இதன்மூலம் ஒரு கருத்து நமக்குப் புகட்டப் பெறுகின்றது. அக்கருத்துதான் யாது? புறக்கரணங்களும் அந்தக் கரணங்கள் பல நம்மிடத்து இருப்பினும் இறைவன் நாட்டம் கொள்ளும் பொழுது மனம் என்ற ஒரு கரணமே தமக்குப் பயன்படுகின்றது. ஏனைய கரணங்களையெல் லாம் அவற்றின் நிலையிலே வைத்துவிட்டு மனம் இறைவனை நாடி உள் முகமாகப் போகவேண்டும் என்பது கோட்பாடு. ஐம்பொறிகளைக் கொண்டும் மனம் புத்தி முதலியவைகளைக் கொண்டும் புற உலகை அறிகின்றோம். புற உலகை அறிகின்ற செயலை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு மனத்தைத் துணையாகக்கொண்டு பரம் பொருளினிடத்து உள் முகமாகம் பயணம் போகவேண்டும் என்னும் கோட்பாட்டை இராசகோபுர வாயிலினுள் செய்யும் நுழைவு விளக்கிக் காட்டுகின்றது. ஒவ்வோர் ஆலயத்தினோடும் சம்பந்தப்பட்டதாகத தேர்த்திருவிழா என்பது ஒன்று உண்டு என்பதை நீ