பக்கம்:சைவமும் தமிழும்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 385 அறிவாய். ஆலயம் என்னும் சின்னத்தின் மற்றொரு பகுதியாக அஃது அமைந்துள்ளது, ஒடுதல்’ என்னும் செயலில் தேர் உடல் தத்துவத்தை நன்கு விளக்குகின்றது: உடலைத் தேர் என்றும், அதன் உள்ளிருக்கும் ஆன்மாவை சதி அல்லது ஊர்ந்து செல்லுபவன் என்றும் கருதவேண்டும் என்று ஞானசாத்திரங்கள் புகட்டுகின்றன; உடலிலுள்ள இயல்புகளையெல்லாம் தேரில் அமைப்பதும் வழக்கமாய் இருந்து வருகின்றது. ஒன்று நிலைத்து நிற்கும் சின்னம்; மற்றது. இயங்குகின்ற சின்னம், இவற்றின்மூலம் விளக்கப்பெறும் கருத்து ஒன்றே என்பதை உணர்க. இராசகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றதும் நம் காட்சியில் விழுவது பலிபீடம். அதனருகில் சென்று வீழ்ந்து வணங்குதல் மரபு, வீழ்ந்து வணங்கும்பொழுது மனிதன் தனது கீழான இயல்புகளை யெல்லாம் அந்த இடத்தில் பலி கொடுக்கப்பட்டன; இனி அவை தலை யெடுப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை’ என்று ஆழ்ந்து எண்ணுதல் வேண்டும். மேன்மையும் மேலான எண்ணமும் எஞ்சியுள்ளன என்னும் எண்ணத்துடன் எழுந் திருத்தல் வேண்டும். இந்த எண்ணத்தின் வலிவு அவன் புதியதொரு பிறவி எடுத்துக் கொண்டதற்குச் சமானமாகின்றது. புதியதாக வருவித்துக் கொண்டுள்ள மேலான மனப் பான்மையை இனி தெய்வத்திற்குரியதாக மாற்றி விடுதல் வேண்டும். இதன் பொருட்டு சாதகன் கோயிலினுள் வலம் வருகின்றன. அவன் வலம் வரவேண்டிய முறையைப் பலி பீடத்திற்கு அடுத்த படியிலிருக்கும் கொடிக் கம்பம் விளக்குகின்றது. கொடி உள்முகமாகத் திருப்பிக் கொண்டிருப்பதை நீ கவனித்திருப்பாய். கோயிலைச் சுற்றி வலம் வருங்கால் உள்ளிருக்கும் இறைவன் தன் வலக்கைப் பக்கம் இருக்கு படிப் பார்த்துக் கொள்ளுகின்றான் பக்தன். இதுவே வலம் வருதல் என்பதன் பொருளாம். வலம் வருதல் பிராணா சை. ச. வி.--25