பக்கம்:சைவமும் தமிழும்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 சைவ சமய விளக்கு யாமத்தின் சின்னமாகும். ஒழுங்குப்பட்ட மேலான மனம் பிராணாயாமத்திற்குத் தகுதியுடையதாகின்றது. மனத் தகத்து உண்டாகும் மாறுதலுக்கு ஏற்ப சுவாசிக்கின்ற வாயுவில் வேறு பாடு உண்டாகின்றது. கீழான மனப் பான்மையுடையவர்க்குச் சுவாசத்தின் போக்கு வரவில் தடு மாற்றம் உண்டு. மேலான மனப்பான்மை உடையவர்க்கு சுவாசத்தின் போக்கு வரவு அல்லது பிராணாயாமம் முறையாக நிகழ்கின்றது என்பதை அறிக. தங்குதடை யின்றி அமைதியாக வலம் வரும்போது பிராணாயாமமும் ஒழுங்காக நிகழ்ந்து விடுகின்றது. சூக்குமமாக உடலின் கண் நிகழும் நிகழ்ச்சி பிராணாயாமம் என்பதும் வலம் வருதல் என்னும் உடலின் துரலமான செயல் அதன் புறச் சின்னமாக அமைகின்றது என்பதும் தெரிந்து தெளியத் தக்கவை. கொடி மரத்திற்கு அடுத்தபடியில் இருப்பது இறைவ னின் வாகனம். சிவபெருமானுக்கு நந்தியும், திருமாலுக் குக் கருடனும், அம்பிகைக்குச் சிங்கமும், முருகப் பெருமா னுக்கு மயிலும், விநாயகருக்குப் பெருச்சாளியும் வாகனம் என்பதை நீ நன்கு அறிவாய், வாகனம் எதுவாயினும் அது சீவான்மாவைக் குறிக்கின்றது. மூலப் பொருளாகிய இறைவனை நோக்கிய வண்ணம் வாகனம் அமைந்திருப் பதை நீ கவனித்திருப்பாய். பதியை அடைய வேண்டியது பசுவின் குறிக்கோள். பதியைச் சென்றடைவதற்கு எல்லாக் காலத்திலும் மனம் இறைவன் நாட்டத்திலேயே இருக்க வேண்டும் என்னும் கோட்பாட்டை வாகனம் விளக்கிக் கொண்டுள்ளது என்பதை அறிந்து தெளி க. திருச்சுற்றில் நடந்து வரும் பக்தன் திருக்கோயிலினுள்ளிருக்கும் இறை வனையும் அவனைப் பார்த்த வண்ணம் இருக்கும் வாகனத்தையும் சேர்த்து வைத்தே வலம் வருகின்றான். குறுக்கே நுழைவது முறையன்று என்பதை உளங் கொள்க. வழிபடுகின்ற அனைவர்க்கும் இடைஞ்சலாக இராமல் ஒத்தாசை செய்யவேண்டும் என்பது இதன் உட்கருத்து.