பக்கம்:சைவமும் தமிழும்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 38? பிறருக்கு இடைஞ்சல் செய்கின்ற அளவு தானே இறைவழி பாட்டிற்குப் புறம்பாய் விடுகின்றான் பக்தன். பிறர் வழி பாட்டிற்கு வேண்டிய வசதிகளைச் செய்பவன் தானே வழிபாட்டில் முன்னேற்றமடைகின்றான். பிறரை புறக் கணித்து யாரும் முன்னேற்றமடைய முடியாது என்பதும், பிறருக்குப் பணிவிடை செய்து எவரும் முன்னேற்றம் அடையலாம் என்பதும் ஆலய வழிபாட்டில் அடங்கியுள்ளன என்பதைக் கருத்தில் இருத்துக. கோயிலின் கருவறைக்குச் செல்லும்பொழுது அஃது இருள் சூழ்ந்திருப்பதைக் காண்கின்றோம். காற்றுக்கோ கதிரவன் ஒளிக்கோ அங்கு இடம் இல்லை. இதற்கெல்லாம் ஆகம விதிகள் இடம் தருவதில்லை என்பர் கோயிலை நிறுவும் ஸ்தபதிகள். நம் உடலமைப்பின் புறச்சின்னமாக கருப்பக்கிருகம் (கருவறை) அமைந்துள்ளது. கருவி கரணங் தளை ஒடுக்கி மனத்தை உள்முகமாகத் திருப்பினால் என்ன அநுபவம் உண்டாகின்றதோ அதற்குச் சின்னமாக ஆலயத் தின் கருவறை அமைந்துள்ளது என்பதை அறிக. கண் முடி. யிருக்கும்பொழுது உடலுக்குள்ளே இருக்கும் நம் நெஞ் சத்துள் ஒரே கார் இருளைத்தான் காண முடிகின்றது. புற உலகிலிருந்து ஆங்கு ஒளி வருவதில்லை. கருவறையிள் அருகில் சென்று தரிசனத்திற்காகப் பக்தன் காத்திருக்கின் றான். என்ன நடக்கின்றது முதலில் திரை மூடப் பெறு கின்றது. சிறிது நேரத்தில் மணி ஒலி கேட்கின்றது. இனி விரைவில் தரிசனம் கிட்டும் என்று பக்தன் ஆர்வத்துடன் அதை எதிர்நோக்குகின்றான். திரை நீங்குகின்றது. உள்ளே கர்ப்பூர ஆராதனை காட்டப்பெறுகின்றது. அதன் ஒளியில் பக்தன் தெய்வத்தின் திருமேனியைக் காண்கின்றான். திருமேனி என்ற எண்ணம் அவன் மனத்தில் எழுவதில்லை. இறைவனையே தரிசிப்பதாக உணருகின்றான். மேலே காட்டிய காட்சி மனத்தகத்து நிகழ வேண்டிய ஞானக் காட்சியின் புறத் தோற்றமாகும் இது. மனத்தினுள் சிந்தையைச் செலுத்தும் ஆத்ம சாதகன் கார்