பக்கம்:சைவமும் தமிழும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 5 என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனை அடுத்து வரும் கடிதமொன்றில் தெளிவாக்குவேன். சந்தர்ப்பத்துடன் விளக்கும்போதுதான் தெளிவு பிறக்கும். இன்னும் ஒர் ஐயமும் நின்பால் எழலாம். பதி, பசு, பாசம் என்ற மூன்று பொருள்களும் உள்ளன என்பதால் நீ அந்த மூன்றையும் சமமாகக் கருதும் குழப்பமே அஃதாகும். இதனையும் தெளிவுறுத்துவேன். உள்ளன' என்பதால் எல்லாப் பொருள்களும் சமமாய் விடுதல் யாங்ஙணம்? அங்ஙனம் பொருள் கொள்ளல் அசம்பாவிதம் என்பதையும் தெளிவுறுத்துவேன். ஒரு நாட்டில் அரசன் என்று உள்ளானோ அன்றே குடிகளும் உள்ளனர்’ என்று கொள்ளும்போது 'அரசனும் குடிகளும் சமம்' என்று கருதுவது பொருந்துமோ? அங்ங்ணமே, உலகில் மக்கள் என்று உள்ளனரோ, அன்றே விலங்கு முதலியனவும் உள்ளன என்று கொள்ளும்போது மக்களும் விலங்கு முதலியனவும் சமம் என்று கொள்ளல் பொருந்துமோ? இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் பொருத்தமின்மை யைக் காண்பது போலவே, பதி உண்டு; அன்றே பசுவும் பாசங்களும் உள்ளன என்பதனால் முப்பொருள்களும் சமம் ஆமாறு இல்லை என்பது வெள்ளிடை மலை. ஆகவே, முப்பொருளும் அநாதி நித்தியம்' என்பதனால் இறைவனை முதற் பொருள் என்று கொள்ளற்குத் தட்டில்லை என்பதைத் தெள்ளிதின் உணர்க. இந்த முப்பொருள்களைப்பற்றி அடுத்தடுத்த கடிதங் களில் உரிய இடம் வரும்போது மேலும் தெளிவுறுத்துவேன். அதற்கு முன்னர் சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் உள்ளன. அவை பதினான்காகும். இவையே சித்தாந்த சாத்திரம்' என்று வழங்குகின்றன: இவற்றைப் பற்றிய குறிப்புகளை அடுத்து எழுதும் கடிதத் தில் தெளிவுறுத்துவேன். * . ... . . . . " அன்பன், கார்த்திகேயன்,