பக்கம்:சைவமும் தமிழும்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 339 வகையில் பாழ்படுத்துவோராகின்றனர். ஒருவரோடொரு வர் பேசாதிருந்து வழிபாடு செய்வது சாலச் சிறந்தது. வழிபாட்டை முடித்தான பிறகு ஒர் இடத்தில் அமைதியாக அமர்ந்திருந்து தியானம் செய்வது முற்றிலும் அவசியம். கல பெரியோர்கள் ஆழ்ந்து எண்ணிய உயர்ந்த எண்ணங் கள் நிறையப்பெற்ற இடம் ஆலயம். ஆங்கு வழிபடுவன் அமைதியுற்று அமர்ந்திருப்பானாகில் அந்த உயர்ந்த ண்ைணங்கள் அவன் மனத்தில் பிரதிபலிக்கும். அதுவே ஆலய வழிபாட்டினால் அவன் அடையும் பெரும்பேறாகும். எத்தனை பேர் ஆலயத்துக்குள் வந்து வணங்குகின்றார் களோ அதற்கேற்ப ஆலயத்தினுள் ஏற்கெனவே அமைந் துள்ள அருள் பன்மடங்கு பெரிதாகின்றது. அருளைத் தானே அடைவதன்மூலம் ஆலயத்தின்கண் அன்பன் அருளைப் பெறுகின்றான். ஆலய வழிபாட்டின் ஒப்பற்ற பயன் இதுவேயாகும். அன்டன், கார்த்திகேயன். 5○ அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, . . நலன். நலனே விளைந்திடுக. இக்கடிதத்தில் ஆலயத்திற்குள் எழுந்தருளியிருக்கும் தெய்வத்திற்கு நடைபெறும் பூசை முறைகளை விளக்கு வேன். இந்தத் தெய்வத்திற்குப் பல விதமான உபசாரங் களுடன் ஆராதனை நிகழ்கின்றது. இத்தகைய ஆராதனைக ளெல்லாம் ஆத்ம சாதகன் அடைந்து வரும் மனப்பரிபாகத் தின் புறச்செயல்களாகும். ஆராதனை செய்கின்றவர்கள் சதாசாரமே வடிவெடுத்திருக்க வேண்டும். நல்லொழுக்கம் அவர்களிடம் ஒங்குமளவிற்கு வழிபாடும் மேம்பாடுடை யதாகின்றது. நல்லொழுக்கம் இல்லாதவன் ஆத்மசாதனத் தில் முன்னேற்றத்தைக் காண முடியாது.