பக்கம்:சைவமும் தமிழும்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 39;. அதன்மூலம் அவனது மனம் மலர்ச்சி அடைவதே ஆலய வழிபாட்டின் பயன் ஆகும் என்பதை உணர்க. மூர்த்திக்கு அலங்காரம் ஆன பிறகு அவருக்கு இனிய நல்லுணவு நைவேத்தியமாகப் படைக்கப்பெறுகின்றது. இறைவன் அதை அங்கீகரிக்கின்றான் என்றே அன்பன் உணர்கின்றான். ஆன்ம சாதனத்தில் முன்னேற்றமடைந்த வர்கள் உணவைத் நைவேத்தியமாகப் படைப்பதில் பொருள் மிக உண்டு என்று உறுதி கூறுகின்றனர். இதற்கு ஆலய வழிபாடு செய்து வந்த இராமகிருஷ்ண பரம ஹம்ஸ்ரே சிறந்த சான்றாக அமைகின்றார். அன்புடன் தெய்வத்திற்குப் படைக்கப்பெறும் நைவேத்தியத்தை மூர்த்தியிடமிருந்து அருட்சோதி ஒன்று கிளம்பி அதனைத் தொடுகின்றது. அத்தகைய அருள் ஸபர்சம் ஆன பின்பே அது பிரசாதமாகின்றது. ஈசுவரப் பிரசாத மாக அன்பன் அதனை ஏற்றுக் கொள்கின்றபொழுது அவனுடைய அந்தக்கரண சுத்திக்கு அது பேருதவி புரி கின்றது என்பதை உளங்கொள்க. திருக்கோயிலுக்குச் செல்லுகின்றவர்கள் வெறுங்கை யுடன் செல்லலாகாது என்பது ஐதிகம். இக்கோட்பாடு இன்றும் பெரு வழக்காக இருந்து வருவதைக் காண் இன்றோம். பெரியோர்களையும் குழந்தைகளையும், கடவுளையும் குரண்ச் செல்லுகின்றவர்கள் நல்ல உணவுப் பொருள் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லவேண்டும். உணவுப் பொருள் மூலமாகவே நாம் குழந்தைகளுடன் ஐக்கியமாதல் முடியும். இந்தக் கோட்பாடே பெரியோர் களின் இணக்கத்திற்கும் முதற்படியாகின்றது. இறைவழி பாட்டிலும் இதே கருத்து அடங்கியுள்ளது. பெரியோர் கட்கும் குழந்தைகட்குமாக நாம் கொண்டு செல்லும் பொருள்கள் அவர்கட்கு விருப்பமானவைகளாக இருத்தல் வேண்டும். இறைவனுக்கு எடுத்துச் செல்லும் பொருள்கள் நமக்கும் விருப்பமானவைகளாக இருத்தல் வேண்டும்.