பக்கம்:சைவமும் தமிழும்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 சைவ சமய விளக்கு ஆலய வழிபாட்டிற்கும் அவை பொருத்தமானவைகளாக வும் அமைதல் வேண்டும். நமக்கு விருப்பமான பொருள்களைப் படைப்பதில் நலன் ஒன்று நமக்கு விளைகின்றது. கடவுளுக்குப் படை யாமல் நாம் உண்பதில்லை என்னும் கொள்கையிலிருந்து உணவுப் பொருள் மீது நாம் வைத்திருக்கும் பற்றுதல் குறைகின்றது. இறைவனுக்குப் படைப்பதன்மூலம் அது து.ாய உணவாக மாற்றப்பெறுகின்றது. அஃது ஈசுவரப் பிரசாதமான பிறகு மற்றவர்களுக்கெல்லாம் வழங்கியான பின்பே எஞ்சியிருக்கும் ஒரு சிறு பகுதியை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும். தெய்வத்தின் பெயரால் மன்னுயிர் களையெல்லாம் நம்முயிர் போன்று கருதும் மனப்பான்மை யும் இதிணின்று உண்டாகின்றது. எல்லா உயிர்களும் இறைவனுக்குச் சொந்தம் ஆதலின் எல்லா உயிர்களை யும் ஒம்புதல்மூலம் இறைவன் நன்கு வழுத்தப்படு கின்றான். உணவு இல்லாது இறை வழிபாடு நிகழலாகாது என்பதன் கருத்து இதுவே என்பதை உணர்க, மாந்தர் சேகரிக்கும் நல்ல உணவுப் பொருள்களில் பெரும் பகுதி ஆலயத்திற்கு வந்து விடுதல் முறை. இந்த அடிப்படையில் தான் திருக்கோயிலில் உண்டி (Hundi) வைக்கப் பெற் றுள்ளது; மக்களும் அதில் பணம் போடுகின்றனர். இந்தப் பணம் கடவுள் பெயரால் பிறகு பல காரியங்கட்குப் பயன் படுகின்றது. இறைவனின் பெயரால் கொடுக்கப் பெறு கின்றபொழுது கொடுக்கின்றவனுக்குத் தான் கொடை யாளி என்ற அகங்காரம் உதிக்காது. ஈசுவரப் பிரசா தத்தை ஏற்கின்றவர்கட்குப் பிறரிடமிருந்து பொருளை ஏற்பது இகழ்ச்சி என்ற மனப்பான்மையும் வராது. கொடுப்பவரும் ஏற்பவரும் இறைவனுக்குரியவர்களாய்ப் விடுகின்றனர். மனப்பான்மை மேன்மையடைவதற்கு பொருளைக் கடவுளுக்கு நைவேத்தியமாகப் படைப்பதே சிறந்த உபாய்மாகும். நமது திருக்கோயில்களில் கையாளப் பெறும் கிரியைகள் தத்துவத்திற்கு விளக்கமாக அமைந்துள்ளன.