பக்கம்:சைவமும் தமிழும்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 333 இதனை உனக்கு விளக்குவது இன்றியமையாதாகின்றது. தீப ஆராதனையச் சான்றாக எடுத்துக் கொள்வோம். அஞ்ஞானம் என்னும் திரை நீங்கியவுடன் சோதிப் பிழம் பாகப் பல விளக்குகள் கொண்டு அடுக்குத் தீபம் (அலங் காரத்திபம்) ஒன்று சுற்றப்படுகின்றது. அஞ்ஞான இருளினின்று ஞான பூமிக்குள் பிரவேசிக்கின்ற சாதகன் ஒரே ஒளிப்பிழம்பைக் காண்கின்றான். அந்த ஒளிப் பிழம் பில் அவன் ஒன்றித்து விடுவதற்குச் சிறிது நேரமா கின்றது. பரம் பொருள் என்றைக்கும் அணையாத ஆத்மப் பிரகாசமாய் இருக்கின்றார். அடுக்குத் தீபத்தில் கணக்கந்த விளக்குகள் உள்ளன. அதன் பிறகுக் காட்டப் பெறும் தீபங்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இறுதியில் ஒரு தீபத்தில் வந்து ஆராதனை முற்றுப் பெறு கின்றது. - கடவுள் ஆராதனையில் ஐம்பொறிகளும் இடம் பெறு கின்றன. ஐம் பொறிகள் பொதுவாகப் பிரபஞ்சத்தை விஷயமாக்குதற்கென்று அமைந்தவைகள். அந்த ஐம் பொறிகளும் பரமனை நுகர்தற்கென்று பயனபடுத்துங் கால் அது நல்ல ஆத்மசாதனமாகின்றது. தேவ ஆராதனையில் கண்கொண்டு காண்பது சோதி சொரூப :மான பரம் பொருள். காதால் கேட்பது அவனிடத் திருந்து உண்டாகும் நாதம். அதற்குச் சின்னமாக மணி ஒசையும், சங்குவாத்தியமும் அமைகின்றன. வேத மோது தலும் ஆங்கு நிகழ்கின்றது. செவிக்கினிய தேவாரத்தை ஒதும் இனிய பாட்டொலியும் நம் காதில் விழுகின்றது. மூக்கால் நுகர்வது ஆராதனையோடு சம்பந்தப்பட்ட நறு மணம் கமழும் தூபமாகும். தொட்டுணர்ந்து இன்புறு வதற்குப் பரமனுக்குச் சாத்திய மலர்மாலை தரப்பெறு கின்றது. நாவால் சுவைத்து மகிழ்வதற்கு அவனுடைய பிரசாதம் வழங்கப்பெறுகின்றது. இங்ங்னம் ஐம்பொறி களாலும் பரம் பொருளே நுகரப் பெறுகின்றார் என்பதை எண்ணி மகிழ்க, இந்த நிகழ்ச்சியில் ஆலய வழிபாடு