பக்கம்:சைவமும் தமிழும்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 சைவ சமய விளக்கு உச்ச நிலையை அடைந்து விடுகின்றது. உலகை அறிதற். கென்று அமைந்த பொறிகளைப் பரமனை அறிதற்கென்று மடைமாற்றம் செய்யப் பெறும்பொழுது அஃது உயர்ந்த, நற்பழக்கமாக அமைந்து விடுகின்றது. திருக்கோயிலைப்பற்றிய விரிவான தத்துவம் தில்லை. யில் திருநடனம் புரியும் நடராசர் ஆலயத்தில் அமைந்: துள்ளது. இதனை விளக்குவேன். உபாசனைக்குரிய மூர்தி தியாகிய நடராசர் நான்கு தூண்களையுடைய ஒரு கொலு மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார். இந்த நான்கு, தூண்களும் நான்மறைகளின் சின்னமாகும். இதற்குச் சற்று முன்பு ஆறு தூண்களுடைய மண்டபம் உள்ளது, இவை ஆறு சாத்திரங்களின் சின்னங்களாகும். இதற்குச் சற்று வெளியே பதினெட்டுத் துரண்களையுடைய மண்டபம் உள்ளது. இவை பதினெண் புராணங்களின் அறிகுறிகளாக அமைந்துள்ளன. நடராசரின் அருகில் செல்வதற்கு ஐந்து படிகளில் மேலே ஏறியாகவேண்டும். இவை சிவனுடைய திருநாமமாகிய ஐந்தெழுத்தின் (பஞ்சாட்சரம்) சின்னமாக அமைந்துள்ளன. நடராசரின் இடப்புறம் சிவகாமி அன்னையார் எழுந்தருளியிருப்பு: பதைக் காணலாம். வலப்புறம் சிதம்பர ரகசியம்’ அமைந்துள்ளது. இதிலும் மேலான கோட்பாடு புதைந் துள்ளது. பராசக்தியின் அருளால் நடராசமூர்த்தியாகிய பதியின் தரிசனம் கிட்டுகின்றது. பதி மனம் மொழியைக் கடந்து நிற்பதால் அது "இரகசியம்’ என்று இயம்பப்பெறு: கின்றது. சிதம்பரத்தில் நிகழும் தீபாராதனை இக்கோட் பாட்டை விளக்குகின்றது. தரிசனத்திற்காகத் திருக்கோயிலுக்குள் செல்லும் பக்தன் ஒருவன் கீழே வீழ்ந்து தண்டம் சமர்ப்பிக்க விரும்பு வானாகில் அதன் பொருட்டு அவன் ஒரு வாகனத் திற்குப் பின்புறமாக வந்து விடவேண்டும். எல்லா வாகனங்களையும் தாண்டி உள்ளே சென்ற பிறகு,