பக்கம்:சைவமும் தமிழும்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 39盛 வீழ்ந்து வணங்குவதில்லை. சிவபோதத்தைக் கடந்தவன் பரம் பொருளில் ஒன்றாய் விடுகின்றான் என்பது இதன் அடிப்படைக் கருத்தாகும் என்பதை அறிக. - அன்டன், கார்த்திகேயன். S響 அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நவன். நலம் பல விளைக. இக்கடிதத்தில் பூசை விதிமுறைகளை விளக்குவேன். தெய்வத் தன்மை எய்துவதே தெய்வத்தை வணங்கு வதற்கு உபாயமாகின்றது. சார்ந்ததன் வண்னமாதல்" என்ற சித்தாந்தக் கொள்கையை நீ அறிவாய். போற்றும் முறையைத் தெரிந்து கொள்ள விழையும் ஒருவன் எதனைப் போற்றுகின்றானோ அதுவாகவே அவன் ஆய்விடுகின்றான். முறைப்படிக் கல்வியைப் போற்று பவன் தானே கல்விக்கு இருப்பிடமாய் விடுகின்றான். பலத்தை நாடி உடற் பயிற்சி செய்பவன் தானே பலவான் ஆகின்றான், முயற்சியாலும், முறைப்படித் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதாலும் எதை வேண்டு மானாலும் மனிதன் பெறுதல் கூடும். எண்ணிய எண்ணியாங்கு எய்துப; எண்ணியார் திண்ணியராகப் பெறின் ? என்ற வள்ளுவர் வாக்கை எண்ணுக, தெய்வத்தை விதிப் படி வணங்குபவன் தானே தெய்வத் தன்மையை எய்து கின்றான். மனிதனுக்கு உரிமையல்லாத ஒன்றை அவன் பெறுதல் முடியாது. தன்னிடத்து இல்லாத இயல்பை வருவித்துக் கொள்ளுதலும் சாத்தியமன்று. விரும்பிய 7. குறன்-668.