பக்கம்:சைவமும் தமிழும்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சைவ சமய விளக்கு வாறும், விருப்பத்தின்படி முயலுவதற்கு ஏற்றவாறும் சிறுமை அல்லது பெருமை அவனை வந்தடைகின்றது. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டன்ைக் கல்." என்ற வள்ளுவத்தை உன்னுக. சிறுமையை அடைவது எளிது. பெருமையை அடைவதற்கோ தக்கவிதிப்படி மிகப் பாடுபடவேண்டும் என்பதை உளங் கொள்க. தெய்வத்தன்மை மனிதனுக்கு அன்னியமானதன்று, மேன்மைகள் அனைத்தும் அவனிடத்துப் பிரியாது அமைந் துள்ளன. மறைந்து சிடக்கும் அவற்றை மேலோங்கச் செய்தவே வாழ்க்கையின் சீரிய நோக்கமாக இருத்தல் வேண்டும். உயர் தன்மை ஓங்க ஓங்க மனிதன் இறை வனுக்கு உகந்தவன் ஆகின்றான். இறைவனோடு உற வாடுதற்கு உற்ற உபாயமும் இதுவேயாகும். தன்னைத் தான் பக்குவப்படுத்ல்க் கொள்வதன்மூலம் தெய்வத்தின் சன்னிதி சார மனிதன் தகுந்தவனாகி விடுகின்றான். ஆலயங்களுள் சிறந்தது உடல் என்பதைச் சென்ற கடிதத்தில் திருமூலர் வாக்கைக் கொண்டு ஒருவாறு விளக்கினேன். அதனை ஈண்டு மேலும் தெளிவாக்குவேன், உயிருக்கு இருப்பிடம் உடல் உடலைக் கொண்டல்லாது உயிரை அறிய முடியாது, இருப்பிடத்தின் மூலம் உயிரின் உயர்வு வெளியாகின்றது. உயிர் அனைத்திற்கும் பொது வாகவும்.ஆதாரமாகவும் இருப்பது எதுவோ அதுவே கடவுள்; பதி. ஆதலின் அஃது உயிருக்கு உயிர் என்று சொல்லப்படு கின்றது. பேரறிவுக்கும், அன்புக்கும், ஆற்றலுக்கும் உறைவிடம் அதுவே. பார்க்கும் இடம் எங்கும் அது நீக்க மற நிறைந்துள்ளது. அதன் முழுமையான காட்சி வரும் போது வாழ்க்கையின் இரகசியமெல்லாம் நமக்குத் 8. டிெ-505