பக்கம்:சைவமும் தமிழும்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 39擎 தெளிவாகிவிடும். அக்காட்சியைப் பெறுதற்கும் வழி ஒன்று உண்டு. அஃது என்ன? சிற்றுடலின் மூலம் நமது சிற்றுயிர் ஒளிர்கின்றது. பேருடலாகிய இயற்கை முழுவதன் மூலம் இறைவன் ஒளிர் கின்றான். இன்னும் இயற்கைக்கு அப்பாலும் அவன் உள்ளான். ஆதியந்தம் காட்டாத முதலாய் நிற்கின்றான். இயற்கையின் வாயிலாக அவனது ஒரு சிறு கூறு மட்டிலும் மிளிர்கின்றது. இறைவனை அறிவதற்கு இயற்கை அல்லது பிரகிருதியே உற்ற உபாயமாகின்றது. எல்லையில் அடங் காது பிரம்மாண்டமாயிருக்கும் பிரகிருதியின் அணுப் போன்ற ஒரு சிறு பகுதியே நமது உடல். பிரம்மாண்டத் தின் பெருமை முழுவதும் சிறு பிண்டமாகிய நம் உடலில் உள்ளது. அண்டத்தைப் போலத்தான் பிண்டமும்’ என்ற பழ மொழியையும் சிந்தித்திடுக. நமது உடலையும் அதனுள் ஒளிர்பவனையும் உள்ளபடி தெரிந்து கொண் டால் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனையும் தெரிந்து கொள்ள இயலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறே பதமாக அமைகின்றதை நாம் அறிகின்றோ மன்றோ? திருக்கோயிலில் இறைவனைத் தொழுகின்றோம். ஆலயங்கள் அனைத்திலும் சாலச் சிறந்ததான நம் உடலில் உலகெங்கும் குடி கொண்டுள்ள இறைவன் நம் உள்ளத்தில் சிறப்பாக இயங்குகின்றான். உள்ளம் பெருகி கோயில் ஊனுடம்பு ஆலயம் என்ற ஒரு பெரியாரின் வாக்கு ஆழ்ந்த பொருளுடையது; எல்லாப்பெரியார்களுமே மானுட சரீரமே தேவாலயங்களுள் சிறந்ததென்று வற்புறுத்தியுள்ளனர். நெஞ்சமே கோயில்; நினைவே சுகந்தம்; அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே என்ற தாயுமானவரின் திருவாக்கையும். 9. தா. பா. பராபரக்கண்ணி-15