பக்கம்:சைவமும் தமிழும்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ சைவ சமய விளக்கு அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு, நலன். நலனே விளைந்திடுக. இக்கடிதத்தில் ஞான நூல்கள், நூலின் வகைகள், சித்தாந்த முதல் நூல்கள் இவைபற்றித் தெளிவாக்க முயல்கின்றேன். - உலகில் "ஞான நூல்கள்' என்ற பிரிவில் எத்துணையோ நூல்கள் அளவின்றிக் கிடக்கின்றன. இவைபற்றி முடிந்த முடிபாகச் சில கருத்துகளைத் தெரிவிப்பேன். வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்), திருமுறை என்பவை முதல் நூல்கள். ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக் கியங்கள், அற நூல்கள், தல புராணங்கள்’ என்பவை வழி நூல்களாகின்றன. சிட்சை, கற்பம், சோதிடம், வியா கரணம், இயல், இசை, நாடகம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி, களிறு முதலிய மெய் நூல்கள்’ என்பவை சார்பு நூல்களில் அட்ங்கும். இந்த மூன்று வகை நூல்களும் ஏதோ ஒரு வகையில் பதி, பசு, பாசம்’ என்னும் முப் பொருள்களை விளக்குதலையே நோக்கமாக உடையன. என்று சொல்லலாம். இதனை, பலகலை ஆ கமவேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல். என்று அருளிச் செய்தார் கொற்றவன் குடி உமாபதி சிவம். இவர் சந்தான குரவர் நால்வருள் நான்காமவ ராவர். எனவே, பதி, பசு, பாசம்’ என்னும் முப்பொருள் களை முறைப்படி உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்தலாகும் என்பதைத் தெளிவாயாக. எல்லா நூல்கட்கும் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக அமையினும், அந்நூல்களைச் செய்தோர்