பக்கம்:சைவமும் தமிழும்.pdf/431

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 339 பூசுஞ் சாந்து என் நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய வாச கஞ்செய் மாலையே; வான்பட் டாடையும் அஃதே; தேசம் ஆன அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே.* என்ற நம்மாழ்வாரின் நல்வாக்கும் இக் கொள்கைக்கு அரணாக அமைகின்றதைக் கண்டு தெளிக. பெரியார் ஒருவர் நம் இல்லத்திற்கு வருவதாக வைத் துக்கொள்வோம். அவரை வரவேற்க இல்லத்தை அலங் கரிக்கின்றோம். நம்மையும் சிறிது அலங்கரித்துக் கொள்ளு கின்றோம். இன்னும் எத்தனையோ செயல்களில் ஈடுபடு கின்றோம். துயலும் பெரியதற்கெல்லாம் பெரியதுமாகிய பரம்பொருளை-மெய்ப்பொருளை-நம் உள்ளத்தின் கண் எழுந்தருளப் பண்ணுவதற்கு இன்னும் எத்தகைய பெரிய ஆயத்தம் பண்ணவேண்டி யுள்ளது என்பதை மறந்துவிட லாகாது. அரசர்க்கெல்லாம் அரசனாகிய ஆண்டவனின் வாழும் இடம் நம் உடம்பு. இது நிலை குலைந்து போமா யின் அவன் இதில் கோயில் கொள்ள இசையான். அவனுக்கு ஏற்றதாக இதனைச் செய்வித்தலே நம் தலையாய கடமை. இதற்கு மகத்துவம் வருவதும் அவனது அருளாலேயாகும். ஆகவே, இதனை யாண்டும் ஈசுவரனுடைய ஆலயமாகச் செய்தல் செயற்கரிய செயலாகின்றது என்பதை அறிந்து தெளிக. - இனி, பூசை என்பதன் பொருள்தான் என்ன? இதனைத் தெளிவாக்குவேன். ஆழ்ந்து நோக்கினால் இறைவனைப் போற்றாதார் இலர். சிலர் இறைவனை வணங்குவதாக உணர்ந்து செய்கின்றனர்; வேறு சிலர் அத்தகைய உணர்ச்சி யின்றியே வணங்குகின்றனர். நாத்திகர் என்போரும் 13. திருவாய், 4.3:2.