பக்கம்:சைவமும் தமிழும்.pdf/432

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鸣ü酶 சைவ சமய விளக்கு ஏதேனும் ஓர் உயர்தன்மையில் நம்பிக்கை வைக்கின்றனர் அந்த உயர்தன்மையே அவர்களால் வழுத்தப்படும் இறை. மையாகும். தெய்வசம்பத்து உடையதைப் பார்த்து மெச்சுதல் மாந்தர் இயல்பு. உயர்தன்மையை மெச்சும் போது மெச்சுபவரே உயர்தன்மை எய்துகின்றனர். () மெச்சுதலும் ஒருவகையில் பூசையாகின்றது. நன்மை யனைத் துக்கும் உறைவிடம் இறைவன். அவனை அடைய ஆசைப் படுவதும் நன்மையை அடைய விரும்புவதும் ஒன்றே. பூசை என்பதற்கு நன்மையில் விருப்பம் என்ற பொருளும் உண்டு. பேராற்றலைக் கானுமிடத்துத் தன்னை யறியாது மனிதனுக்கு வியப்பு வந்துவிடுகின்றது. இத்துணைப் பேராற்றல் வாய்ந்தது ஒன்று உண்டா என்று அதிசயிக்கின் நான். (2) மெய்ப்பொருளின் மகத்துவத்தை உணர்வதால் உண்டாகும் அதிசயமே பூசையாகின்றது. (எ.டு) மணிவாசகப் பெருமானின் கீர்த்தித் திருவகவல், அற்புதப் பத்து இவற்றை நோக்குக. பேராற்றல் படைத்துள்ள ஒன்றை நெருங்குதற்கு ஏற்ப தின் துயரங்களும் அச்சங்களும் நீங்கப் பெறுவதை மனிதன் காண்கின்றான். அப்போது அவன் அல்லலை நீக்கும் பரம்பொருளின் கண் அடிபணிகின்றான். வேறு எவ்விதத்திலும் நன்றி செலுத்த அவனுக்கு இயலுவ: தில்லை. (3) ஆதலால் அச்சத்தைத் தவிர்த்தலும் அடிபணி தலும் பூசையின் பகுதிகளாகின்றன. இறைவனது சட்டத் திற்கு அடிபணிந்து ஒழுகுமளவு மனிதனுக்குச் சீரும் சிறப்பும் உண்டாகின்றன. அதனால் மனிதன் தனக்கு உண்டாகும் மகிழ்வை அட்க்க முடியாது தன் இறைவனைப் போற்றவும், வழுத்தவும் வணங்கவும் செய்கின்றான். உள்ளத்தின் உவகையே வணக்கமாக வடிவெடுக்கின்றது. இறைவனைப்பற்றிய புகழெல்லாம் பொருள் சேர்ந்த புகழாகின்றது. ஏனென்றால் மனம் எப்படியோ மொழியும் அவ்விதமாகவே அமைந்துவிடுகின்றது. (4) மனங் கசிந்து. போற்றுதலும் வழுத்துதலும் பூசனையின் கூறுபாடுகளாகின்றன. (எ.டு) மணிவாசகப் பெருமானின் போற்றித் திருவகவலை நோக்குக. இறைவனைப் பாவிப்பாரின் பாவம் அறுபடு