பக்கம்:சைவமும் தமிழும்.pdf/433

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 总翡簧 கின்றது. அவனுடைய மேன்மையைச் சிந்திக்கச் சிந்திக்க மனமே மேன்மையுறுகின்றது. தெய்வசம்பத்தில் தோய்ந் திருப்பவர்கட்கு ஆனந்தம் மேலிடுகிறது. (5) ஆகவே, அவனைப் பாவிப்பதும் பூசையாகின்றது. உலகச் செயல்க ளெல்லாம் இறைவனுடைய சங்கற்பத்தின்படி நடைபெறு கின்றன. அவனது ஆணை:ாலன்றி ஓர் அணுவும் அசை யாது. நமக்கு நன்மையாகவும் திமையாகவும் தோன்று பவை அவனுடைய ஆட்சியில் பொருத்த மு.ைசேவை யாகவே உள்ளன. இந்தப் பேருண்மையை அறியும் பக்தர்கள் தம்மையே ஈசுவரனுக்கு அர்ப்பணம் செய்து விடுகின்றனர். அவன் ஆட்டி வைத்தபடி ஆடவும் ஒருப்படு கின்றனர். ஒரு சிறு செயலிலும் தங்களுக்கு இச்சா சுதந்திரம் இல்லை என்ற எண்ணம் வந்துவிடுகின்றது. கன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே,' என்னும் எண்ணம் வலுத்துவிடுகின்றது. இது சரணாகதிவு அல்லது அடைக்கலம் என்று வழங்கப்பெறுகின்றது. கின் திருவரு ளால் என் பிறவியை வேர் அறுப்பவனே புடை யாங் அடி யேவன் அடைக் கலமே ' என்பன போன்ற மணிவாசகப் பெருமானின் திருப்பாடல் களைக் காண்க. (9) இத்தகைய சீரிய மன நிலையும் இறை வனுக்கு உகந்த பூசையாகும். இசை விருந்தைச் சுவைப் பவர்கள் தங்களையே மறந்து இசையில் ஒன்றித்து விடுதல் போன்று ஈசுவர இயல்பில் ஒன்றித்து விடுவார் உண்டு. அவனது அருட் பிழம்பை எண்ணுங்கால் எண்ணுபவர், 24. திருவா. குழைத்த பத்து-7. 15. திருவா, அடைச்சலப்பத்து-2 சை, ச. வி.-26