பக்கம்:சைவமும் தமிழும்.pdf/434

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 சைவ சமய விளக்கு எண்ணம், எண்ணப்படும் பொருள் என்னும் மும்மை போய்விடுகின்றது. சீவபோதம் சிவபோதத்தில் ஐக்கிய மாகின்றது. இரண்டறக் கலத்தல் என்னும் இத் நிலையில் பூசை முழுநிறைவு பெறுகின்றது. இங்கனம் மனிதனை மேன்மையுறச் செய்யும் உபாயங்களெல்லாம் பூசையா கின்றன. பூசை புரிவதில் இருவகை புண்டு. அவை மானச பூசை, பாகிய பூசை என இரு வகைப்படும். இவற்றை விளக்குவேன். மானச பூசை; உடலை வளர்க்கவும் துரக தாக்கவும் நாம் கடமைப்பட்டிருப்பது போன்று உள்ளத்தைப் பண்படுத்து வதும் அறிவுடையோர் கடமைப் பட்டுள்ளனர். மானச பூசையே அதற்கு உற்ற உபாயமாகின்றது. இல்லத்தில் அமைக்கப்பெற்றிருக்கும் பூசை அறை அதற்கு ஏற்ற இட மாக அமைகின்றது. நறுமணமும் தெய்வீகக் காட்சியும் அமைக்கப்பெற்ற அவ்வறையிலுள் நீராடிவிட்டுத் துர்ய ஆடை அணிந்து கொண்டே செல்லுதல் வேண்டும். அப்படிச் செல்லும் சாதகன் தன்னந் தனியாய் அவ்வறுை யினுள் இருப்பது சாலச் சிறந்தது. ஆங்கு எழுந்திருளப் பண்ணியிருக்கும் தன் இஷ்ட தெய்வத்துக்கு அவன் கீழே வீழ்ந்துக ாயத்தால் வணங்குதல் அதற்கு அடுத்த செயல் ஆகும். உடலுக்குச் சிரமம் இல்லாதபடி ஒரு நல்ல ஆசனத்தின் மீது இனிது வீற்றிருக்க வேண்டும். மனத்தை ஒருமைப்படுத்திக் கொண்டு உலகில் உள்ளோர் அனை வரும் இன்புற்றிருக்கவேண்டும் என்று மனமார முதலில் வாழ்த்துவது இறைவழிபாட்டின் முதற்படி யாகும். எல்லாரும் இன்புற் றிருக்க கினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே. ே என்ற தாயுமானவரின் வாக்கும் இதற்கு வழிகாட்டியாக 13. தா. பா. பராபரக்கண்ணின221