பக்கம்:சைவமும் தமிழும்.pdf/436

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亭{}毒 சைவ சமய விE க்கு தெவ்வுருவம் அவ்வுருவம்தானே ' என்றபடி யார் யார்க்கு எத்தகைய தெய்வ வடிவத்தில் விருப்பமோ அத்தகைய வடிவுடையனாய் அவனை வரவேற்கலாம், இதயகமலத்தில் எழுந்தருளியுள்ள அவனுக்கு இனிய உபசாரங்கள் பல செய்தல் வேண்டும். இதுவே மானச பூசையாகும். நம் வீட்டிற்கு வரும் பெரிய விருந்தினர் ஒருவருக்கு என்னென்ன விதங்களில் மரியாதை காட்டுவோமோ அவ்வவ்விதங்களிலெல்லாம் இறைவன் மனத்தால் வழுத்தப் பெறுகின்றான். திருவடிகளை அலம்புவதற்கு முதலில் திர்த்தம் அளிக்கப்பெறுகின்றது. மானச பூசையில் அன்பே அதற்கு மஞ்சன நீர் ஆகின்றது. பின்பு இறை வனுக்கு உள்ளம் என்னும் ஆசனம் அளிக்கப்பெறுகின்றது. அதே அன்பு நீர் மீண்டும் ஆசமனம் பண்ணுதற்குத் தரப் பெறுகின்றது. நீரைக்கொண்டு முகம் துடைப்பதற்கும் அதைத் துளி அளவு உட்கொள்ளுதற்கும் ஆசமனம் பண்ணுதல் என்று பெயர். உலக வழக்கில் மலர்கள், இலைகள் முதலியவை அர்க்கியமாகப் படைக்கப்பெறு கின்றன. மேன்மை தங்கிய மனமே இறைவனுக்கு கந்த அர்க்கியமாகின்றது. எல்லாராலும் சொந்தம் பாராட்டப் பெறுவது அவரவர் மனம். அதைத் துயதாக்கி இறை வனுக்கு அர்க்கியமாகப் படைக்கவேண்டும். பின்பு, அன்பு என்னும் மஞ்சன நீரால் சித் தமிசை வீற்றிருக்கும் இறைவன் நீராட்டப்பெறுகின்றான். அடுத்தபடி அவன் அணிதற்கு ஆடைவேண்டும். சிதாகாசம் அல்லது உள்ளப் பெரு வெளியே அவனுக்கு ஆடையா கின்றது; அவனை மூடுவதற்கு இதைத் தவிர வேறு ஒன்று மில்லை. மோப்பம் அல்லது கிராண சக்தி வாசனைத் திரவியமாக அளிக்கப்பெறுகின்றது. உடல் முழுதும் iழி, இரண். திருவந். 44