பக்கம்:சைவமும் தமிழும்.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டியல் 醯彎器 வியாபித் திருக்கும் பிராணன் தாபமாகக் கொடுக்கப்படு கின்றது. அதன்பிறகு தீபம் காட்டப்பெறுதல் வேண்டும். சாதகனுடைய நல்லறிவே மானச பூசையில் தீபமாகக் கருதிப்பெறுசின்றது. சுடர்விட்டெரியும் தீபமாகத் தனது புத்தி அல்லது நல்லறிவைத் தனது மனத்தகத்துக் கோயில் கொண்டிருக்கும் பரஞ்சோதியின்முன் வைக்கின்றான். உயிர் வாழ்க்கையில் சிவகோடியில் அனைவர்க்கும் பெரும் பற்று இருப்பதையே நீ அறிவாய், இந்த வாழ்க்கைப் பந்தை இறைவனுக்கு நைவேத் தியமாகப் படைத்து விடு கின்றான் பக்தன். அனாகத தொனி' எனப்படும் தொனி ஒன்று இயற்கையில் உண்டு. அஃது ஒங்கார வடிவமாக ஓயாது ஒலித்துக்கொண்டிருக்கும். நம் சிற்றுடல் வாழ்க்கை முழுவதும் ஒழுங்காகும்போது இத் தொணியை நம்முன் கேட்கலாம். மானச பூசையில் இத்தொனி மணியாக அமைந்து விடுகின்றது. அர்ச்சனைக்கு மலர்கள் வேண்டு மல்லவா? அகிம்சை, சத்தியம், விவேகம், வைராக்கியம், சாந்தி, பணிவு, அன்வு, அமைதி, தீரம், வீரம் முதலிய வற்றை ஆழ்ந்து சிந்தித்து ஒன்றன்பின் ஒன்றாகச் சாத்துவது மலர் அஞ்சலியாகின்றது. பாவனை அல்லது மனக் கண்ணால் உணர்தல் வலிவும் தெளிவும் பெறுதற் கேற்ப மானச பூசையும் அவற்றிற் கேற்ப முழுநிறைவு பெறுகின்றது. பூசையின் ஒவ்வொரு பகுதியையும் ஆழ்ந்து பாவித்துக் கொண்டே போனால் பரிபூரண பிரம்மானந்த அநுபவம் என்பதைத் தெளிவாக உணரலாம். பாகிய பூசை வழிபாடுகளுள் மானச பூசையே மேலானது. அப்பர், ஞானசம்பந்தர், நம்மாழ்வார் போன்ற ஞானச் செல்வர்கள் கண்ட வழியல்லவா? ஆனால் இதனை முழுநிறைவுடன் செய்வதற்கு எல்லார்க்கும் இயலுவதில்லை. சூக்குமப் பார்வையும் சூக்கும பாவனை யும் உண்டாகும்வரை துரலப் பொருள்களின் உதவியை நாடுதலே முறை. சிறார்கட்குத் தொடக்க நிலைக்கல்வியில் குறிப்பாகக் கணிதம் கற்பதில் பயன்படுபடுத்தப்பெறும்