பக்கம்:சைவமும் தமிழும்.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

粤萄器 சைவ சம விளக்கு பல் வேறு உருவங்கள் போன்றது இங்குப் பயன்படும் பொருள்கள். ஆன்ம சாதனத்தில் முதிர்ச்சி பெறுவதற்கு முன்பு மூர்த்தி வழிபாடு பெரிதும் பயன் படுகின்றது. இல்லத்தில் பூசையறையில் எழுந்தருளியிருக்கும் தெய்வத் திருவுருவத்தின் முன்பு இந்த வழிபாட்டை மேற்கொள்ள லாம், மானச பூசை செய்தானதும் அது மனத்தில் நன்றாய்ப் பதி தற்பொருட்டுத் திரும்பவும் ஒரு முறை பாகியத்தில் அதனைச் செய்கின்றான். சித்தமிசை குடிகொண்டிருக்கும் தெய்வம் தன்னெதிரேயுள்ள திருமேனியில் அல்லது அடத்தில் ஆவிர்ப்பவிக்கும்படி வேண்டுகின்றான். இந் நிலையில் அவன் கண்விழித்துப் பார்க்கும்போது தன் முன்னிலையில் எழுந்தருளியிருக்கும் திருவுருவம் தெய்வத் தன்மையுடன் திகழ்வதைக் காண்கின்றான். தான் சேகரித்து வைத்துள்ள மஞ்சன நீர், சத்தனம், மலர்கள் முதலியவை இப்போது பகன் படுகின்றன. பயபக்தியுடன் திருப்பாதத்திற்கு நீர் (பாத்யம்) வார்க்கப்பெறுகின்றது. சந்தனம், வில்வம், திருத்துழாய, அறுகு, அட்சதை முதலியவற்றில் ஏதேனும் ஐந்து திரவியங்கள் அடங்கப் பெற்ற அர்க்கியம் படைக்கப்பெறுகின்றது. பின்பு மனத்திற்கு கந்தவாறு அபிடேகம், அவங்காரம், தூய தீபம், நைவேத்தியம், ஆ.சமனம் அருச்சனை, தோத்திரம் முதலியவந்தால் பாகிய பூசை நிறைவுபெறுகின்றது. பாகிய பூசையில் மேற்கொள்விப்பெறும் சடங்குகள் யாவும் ஆத்ம சாதனத்தின் பல்வேறு இயல்புகளை விளக்கு பவையாய் அமைந்துள்ளன. இறைவனுக்கு இவை தேவையா என்ற வினா எழ இங்கு இடம் இல்லை. ஏனெனில், இவை யாவும் பக்தனுக்குப் பயன்படுகின்றன. அவன் ஈசனை நோக்கி ஏகுவதற்குப் பயன்படுபவைகளாய் அமைந்தவை இவை. உயிர்களை இறைவன்மாட்டு இட்டுக் கொண்டு போதலே இயற்கையின் தொழில் ஆதலின் இயற்கையை இறைவழி பாட்டில் பயன்படுத்துவதே