பக்கம்:சைவமும் தமிழும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் 7 அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர் என்பதையும் அவர்கள் பல்வேறு தரத்தினர் ஆவர் என்பதையும் யாவரும் அறிவர். "முதல்வழி சார்பென நூல் மூன்ருகும்’ என்று நூல்களை மூன்று வகையாகப் பிரிவினை செய்து பேசும் இலக்கணம். இவற்றுள் முதல் நூலே வினையின் நீங்கி விளங்கிய அறிவனாகிய இறைவனால் செய்யப் பெற்றது. இனித் தம்வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயல் எல்லாம் இறைவன் செயலாக இருத்தலால், இந்த அருட் செல்வர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களில் அடங்கும் என்பதையும் அறிவாயாக. . சிவனும்இவன் செய்தியெல்லாம் என்செய்தி யென்றும் - ............... உடனாகி கின்றுகொள்வன்." என்று சித்தியார் கூறுவதனால் இதனை அறியலாம். துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும் பிரியாதே கிற்கின்ற பெம்மான்-துரியத்தைச் சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும் ஆக்கியிடும் அன்பர்க்கவன்." - - |துரியம்-பேருறக்கம்; அது கடந்த நிலை, துரியா தீதம்.1 . . . . . . . . . என்ற திருக்களிற்றுப் பாடியார் செய்யுளாலும் தெளிய லாம். - - . . . . . . . வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்." . . . என்ற தொல்காப்பிய நூற்பாவும் இக்கருத்தினையே தன்னுரல்-பாயிரம். சித்தியார் 10-1 களிறு-69 தொல், பொருள். மரபு.98

o