பக்கம்:சைவமும் தமிழும்.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

尋む8 சைவ சமய விளக்கு பொருளைப் பெருமிதமாகச் செலவிடுவதால் பூசை பெரியதாய் விடாது என்பதை உளங் கொள்க. தற் பெருமைக்காகவென்று விண் விரயம் செய்வது இறைவ ஆக்கு ஏற்காது. பொருளுடையோர் அதைத் தங்களுக் கென்று வைத்துக் கொள்ளாது மற்றவர்க்கும் இறைவன் பெயரால் பகுத்துக் கொடுக்குங்கால் அதனால் பயன் உண்டு. பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் . தொகுத்தவற்றுள் எல்லாங் த.ை ' என்பது வள்ளுவர் வாக்கன்றோ? ஆராதனைகளுள் சமா ராதனை மிகவும் முக்கியமானது என்பதை அறிக. மனப் பான்மையே பூசையில் முக்கியமானது. கண்ணப்பநாயனார் வாழ்க்கையை நோக்குக. அவர் வழிபாட்டிற்காகக் கையாண்ட பொருள் போற்றத்தக்கதன்று. அப்படி யிருந்தும் அஃது இறைவனுக்கு உகந்ததாயிற்று. இங்கு உயர்ந்த மனநிலையே அதற்குக் காரணம் என்பது தெளிவு: அன்பும், ஊக்கமும், பணிவும் பூசனைக்கு ஆதாரமாகின்றன. மனம் பண்படுவதே பூசையின் பெரும்பயன் என்பதை உளத்தில் இருத்துக. நாடோறும் இறைவனைப் போற்ற மனிதன் கடமைப் பட்டவன். பேசற்றுமளவு புனிதம் அவன்பால் வந்து எய்துகின்றது. அதனால் வாழ்க்கையே ஓயாது புதுப்பிக்கப் பெறுகின்றது. பொருளைத் தேடும் மனிதன் பொருட் பெருக்கை உணர்வது போன்று இறைவனை முறையுடன் வழுத்துபவன் மேம்பாடு அடைவதை அவனே உணர்கின் றான். நாள் ஏற ஏறப் புதிய ஆனந்தம், புதிய உற்சாகம், புதிய அமைதி, புதிய வலிவு ஆகிய தெய்வ சம்பத்துகளுடன் வாழ்க்கை பொலிவடைந்துகொண்டு வருவது அவனுக்குத் தெளிவாகப் புலனாகும். இவ்வுலகம் உண்மையில் இருள் 20. త్రాలిణికి శీ ,