பக்கம்:சைவமும் தமிழும்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவ சமய விளக்கு அரண் செய்தல் காண்க. இவ்வாற்றால் நாம் கொள்ளும் முதல் நூல்கள் வட மொழியில் வேதம், சிவாகமம்’ என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் ஈறாக உள்ள பன்னிரு திருமுறைகள் என்பனவுமாகும். சிவனைத் தலைப்பட்டுச் சிவனேயாய் நின்றவர்களும் உளரோ என்ற ஐயம் நின்பால் எழலாம். கூறுவேன்; இவர்கள் வாயிலாக இறைவன் இயற்றியருளும் அதியற் புதச் செயல்களாலே இதனை நாம் அறிந்து கொள்ளலாம். ஒடம் கரையேற்றுதல், முத்துச் சிவிகையேறுதல், உலவாக் கிழி பெறுதல், திருமறைக் காட்டில் கதவடைத்தல், ஆண் பனையைப் பெண்பனை யாக்குதல், பொற்றாளம் பெறுதல், பாலை நிலத்தை நெய்தல் நிலமாக்குதல், ஆற்றில் ஏடு எதிரேறப் பண்ணுதல், பாண்டியனுக்கு வெப்பு நோய் தவிர்த்தல், எலும்புக்கு உயிர் கொடுத்தல்இவை ஞான சம்பந்தப் பெருமான் நிகழ்த்திய அற்புதச் செயல்கள். யானையினாலேயும், நீற்றறையினாலேயும் நஞ்சினாலேயும் உண்டான கொலையை நீக்குதல், கல்லைத் தெப்பமாகக் கொண்டு கடலை நீந்துதல், திருமறைக் காட்டில் வாசலைத் திறப்பித்தல்-இவை அப்பர் பெருமானின் அற்புதச் செயல்களாகும். வீடுபேறு நல்கும் சிவபெருமானைத் துது அனுப்பின நம்பியாருரரின் செயல் சாமானியமானதா? முதல்வனைக் குதிர்ைமேல் எழுந்தருளச் செய்தல், திருவடிப் பேரின்பத்தினை அவனருளால் திருவாசகம், திருக்கோவையார் என்ற இரண்டு நூல்களாகப் பாடியருளுதல், அப்பெருமானையே அவற்றை எழுதிக் கொள்ளச் செய்தல்-ஆகியவை செயற்கரிய செயல்களன்றே தெய்வப் புலமைத் 7. களிறு-70 8. ைெடி-71 9 டிெ-72