பக்கம்:சைவமும் தமிழும்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயிர இயல் § திருவள்ளுவர் மொழிந்த-மெய் வைத்த சொல்' என்ற தாலும் தேவாரம், திருவாசகம் முதலிய திருமுறைகளும் திருக்குறளும் சித்தாந்த முதல் நூல்களாகக் கருதப் பெறுதல் இனிது விளங்கும். நூலைக் கற்று அதன் விழி நின்று பயன்பெறுவார் இரு திறத்தினர். அறத்தின் பெருமையை உணர்த்தி அதன் வழியொழுகி இம்மை மறுமை இன்பங்களை அடைவார் ஒரு திறத்தினர்; இறைவனது அருளின் பெருமை4ை உணர்ந்து அதன் வழியொழுகி வீட்டின் பத்தினைப் பெறுவார் மற்றொரு திறத்தினர். இவர்கள் முறையே "உலகர்” எனவும், சத்தி நிபாதர்” எனவும் வழங்கப் பெறுவர். உலகர் பொருட்டுக் செய்யப்பெற்ற நூல் அற நூல் எனப்படும்; இது பொது நூலாகும். சத்தி நிபாதர் பொருட்டுச் செய்யப் பெற்றது அருள் நூல்" எனப்படும். இது சிறப்பு நூல். ஆரண நூல் பொதுசைவம், அருஞ்சிறப்பு நூலாம் நீதியினால் உலகாக்கும் சத்திகிபா தாக்கும் நிகழ்த்தியது.' என்னும் சிவஞான சித்தியினையும், வேதமோ டாகமம் மெய்யாய் இறைவன் நூல் ஒதும் பொதுவும் சிறப்புமென் றுள்ளன." என்னும் திருமந்திரத்தையும், உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பதும் நிலவுமெய்ந் நெறிசிவ நெறிய தென்பதும்.' என்றருளிய சேக்கிழார் விளக்கத்தையும் நோக்கினால் 11. நெஞ்சுவிடு தூது-25 12. சித்தியார். 8.15 13. திருமந், எட்டாந்தர், ஆநந்தம்.28 38. பெ. பு, திருஞா, புரவி.8.82