பக்கம்:சைவமும் தமிழும்.pdf/467

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 455 வழுத்தியநா பியில்துரியம் பிரான னோடு மன்னுடரு டனும்கூட வயங்கா நிற்கும்; அழுத்திடும்மூ லம்தன்னில் துரியா தீதம் அதனிடையே புருடன்ஒன்றி அமரும்; ஞானம் பழுத்திடும்பக் குவர்.அறிவர் அவத்தை ஐந்தில் பாங்குபெறக் கருவிநிற்கும் அவத்தை தானே (26) இந்த இரண்டு பாடல்களில் சாக்கிரம் முதலிய ஐந்து அவத்தைகளும் அந்தந்த அவத்தைகளில் தோன்றும் தத்துவங்களும் குறிக்கப்பெற்றுள்ளன. எனக்கென் செயல்(25): இங்ங்ணம் தொடங்கும் இப் பகுதியில் கலி நிலைத்துறை யாப்பில் அமைந்த இருபத் தெட்டுப் பாடல்கள் அடக்கம். அனைத்தும் தத்துவங்கள் ததும்பிப் பொதிந்து நிற்கும் பாடல்கள் அவற்றுள் சில. எனக்குள் னச்செயல் வேறுஇலை, யாவும்இங்கு ஒருநின் தனக்குஎ னத்தகும்; உடல்பொருள் ஆவியும் தந்தேன்; மனத்த கத்துள அழுக்குஎலாம் மாற்றி,எம் பிரான்நீ நினைத்தது எப்படி, அப்படி அருளுதல் நீதம். (1) வேதம் எத்தனை? அத்தனை சிரத்தினும் விளங்கும் பரத நித்திய பரம்பர; நிரந்தர;பரம; நாத; தற்பர சிற்பர வடிவமாய் நடிக்கும் நீத நிர்க்குண நினைஅன்றி ஒன்றுநான் நினையேன். (5)