பக்கம்:சைவமும் தமிழும்.pdf/468

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 சைவமும் தமிழும் நெறிகள் தாம்பல பலவுமாய், அந்தந்த நெறிக்குஆம் செறியும் தெய்வமும் பலபல ஆகவும் செறிந்தால் அறியும் தன்மைஇங்கு ஆர்?உனை அறிவினால் அறிந்தோர் பிறவும் தன்மைஇல் லாவகை கலக்கின்ற பெரியோய்! (6) பெரிய அண்டங்கள் எத்தனை அமைத்து, அதில்பிற்ங்கும் உரிய பல்லுயிர் எத்தனை அமைத்து அவைக்குஉறுதி வருவது எத்தனை அமைத்தனை, அமைத்துஅருள் வளர்க்கும் அரிய தத்துவ! எனக்குஇந்த வண்ணம்ஏண அமைத்தாய்? (7) தந்தை, தாய்,தமர், மகவுஎனும் அவையெலாம் சகத்தில் பந்தம்.ஆம் என்றே, அருமறை வாயினால் பகர்ந்த எந்தை நீஎனை இன்னம்.அவ் அல்லலில் இருத்தில் சிந்தை நான்தெளிந்து எவ்வணம் உய்வணம்? செப்பாய் (10) ஒன்ற தாய்ப்பல வாய்,உயிர்த் திரட்குஎலாம் உறுதி என்றதாய், என்றும் உளதாய் எவற்றினும் இசைய நின்ற தாய்நிலை நின்றிடும் அறிஞர்என் நெஞ்சம்