பக்கம்:சைவமும் தமிழும்.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற சான்றோர் இலக்கியங்கள் 457 மன்ற தாய்,இன்ப உருக்கொடு நடித்திடின் வாழ்வேன் (12) பின்னும், முன்னுமாய், நடுவுமாய் யாவினும் பெரியது என்னும் தன்மையாய், எவ்வுயிர்த் திரளையும் இயக்கி, மன்னும் தண்அருள் வடிவமே ! உனக்குஅன்பு வைத்தும் துன்னும் இன்னல்ஏன்? யான்எனும் அகந்தைஏன்? சொல்லாய் (15) மின்னை அன்னபொய் வாழ்க்கையே நிலைஎன மெய்ஆம் உன்னை நான்மறந்து எங்ங்ணம் உய்வணம் உரையாய்; முன்னை வல்வினை வேர்அற முடித்து என்றும் முடியாத் தன்னைத் தன்அடி யார்க்கு அருள் புரிந்திடும் தக்கோய் ! (16) உற்று உணர்ந்து,எலாம் நீஅலது இல்லைஎன்று, உனையே பற்று கின்றனர்;எந்தை! நின் அடியர், யான்பாவி முற்றும் மாயம்.ஆம் சகத்தையே மெய்என, முதல்நான் அற்றுஇ ருந்திடத் தொழில்செய்வான் தனிநிகர் ஆனேன் (28) பாடல்களில் ஆழங்கால்பட்டுப் படித்தால் மணிவாச கப்பெருமானின் செல்வாக்குத் தட்டுப்படும்.